யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராக தொல்.திருமாவளவன் கண்டனம்

யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,

இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி மீண்டும் நிறுவப்பட வேண்டுமெனவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஓரிரு நாள்களில் இச்சம்பவம் நடந்திருப்பது, இந்தியாவை இலங்கை அரசு பொருட்படுத்தவில்லை என்பதையே எடுத்துக்காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீன அரசின் கூட்டாளியாக மாறி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் இலங்கை அரசை இந்தியா இப்போதும் நட்பு சக்தியாகக் கருதுவதும், ஈழத்தமிழர்களின் நலனை முற்றாகப் புறக்கணிப்பதும் சரியான அணுகுமறை அல்ல என்பதை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.