மாஸ்டர்’ லீக் காட்சிகள்: படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள்
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இன்று ஒரு சில இணையதளங்களில் ‘மாஸ்டர்’ படக்காட்சிகள் சில லீக் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘மாஸ்டர்’ படத்தின் சுமார் ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக லீக்காகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் லீக் ஆன காட்சிகளை இணையத்தில் இருந்து நீக்க படக்குழுவினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 13-ஆம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்றே படத்தின் ஒருசில காட்சிகள் லீக் ஆகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினர்களின் சமூக வலைதள பக்கங்களில் லீக் ஆன திரைப்படக் காட்சிகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் ‘’மாஸ்டர்’ படத்தில் அனைவரின் ஒன்றரை வருட உழைப்பு உள்ளது. அனைவரும் இந்த படத்தை திரையில் பார்த்து ரசீப்பீர்கள் என்று நம்புகிறோம். தயவு செய்து லீக் ஆன காட்சிகள் குறித்த தகவல் தெரிந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள்’ என்று கூறியுள்ளார்.
மேலும் லீக் காட்சிகள் அனைத்தும் விரைவில் நீக்கப்படும் என்றும் இன்னும் ஒரே ஒரு நாள் பொறுத்திருந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தை திரையில் ரசிக்கும்மாறு கேட்டுக் கொள்வதாகவும் லீக்கான காட்சிகளை தயவுசெய்து பகிர வேண்டாம் என்றும் படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது லீக்கான காட்சிகள் கிட்டத்தட்ட அனைத்தும் டெலிட் செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் எப்படி லீக் ஆனது என்பது குறித்து தற்போது படக்குழுவினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை