தோட்ட தொழிலாளர்களுடன் தேயிலை பறித்து மகிழ்ந்த பிரியங்கா காந்தி!

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி அவர்களுடன் இணைந்து தேயிலை பறித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பழங்குடியின பெண்களுடன் நடனமும் ஆடியுள்ளார்.

அசாமுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் பழங்குடியின பெண்களிடம் பேசியதுடன், அவர்களுடன் ஜூமூர் என்ற நடனத்தையும் ஆடினார்.

இதனிடையே அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி அவர்களுடன் சேர்ந்து தேயிலை பறிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்