தமிழழகனின் 22 வருடகால அரச சேவையை பாராட்டி கௌரவிப்பு

[பைஷல் இஸ்மாயில் ]

 

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடந்த 05 வருடங்களாக கடமையாற்றிவிட்டு தனது 55 வயதில் 22 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு நிலைக்குச் சென்ற எஸ்.தமிழழகனின்

சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும்

நிகழ்வு கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின்

திருகோணமலை காரியாலயத்தில் இன்று மாலை (23) இடம்பெற்றது.

 

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர்

வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற

இந்த கௌரவிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ

திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி எஸ்.நவேந்திர ராஜா, திட்டமிடல் வைத்திய பிரிவின் வைத்திய அதிகாரிகளான

எஸ்.சிவச்செல்வம், எஸ்.உதயனன், கப்பல்துறை மருந்து உற்பத்திப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர்

எம்.வர்மேந்திரன், பிரதம சேவை உத்தியோகத்தர் திருமதி.

சீ.ஆர்.நிர்மலநாதன் உள்ளிட்ட

சுதேச திணைக்கள உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு

சிறப்பித்தனர்.

இதன்போது, ஓய்வுபெற்றுச் சென்ற எஸ்.தமிழழகனின் 22 வருடகால

அரச சேவைகளையும், கடந்த 05 வருடங்களாக சுதேச மருத்துவத் திணைக்கத்துக்கு அயராது உழைத்து

செயற்பட்ட அவரின் உன்னதமான சேவைகள் பற்றி பேசப்பட்டு,

பாராட்டி கௌரவித்ததுடன், ஞாபகார்த்த சின்னங்களும், பரிசில்களும்

வழங்கி வைக்கப்பட்டது.

 

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய

கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் அவருக்கான ஞாபகச் சின்னத்தையும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன்

பணப் பரிசிலையும், திட்டமிடல் வைத்திய பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயனன்

பொன்னாடை போர்த்தி கௌரவித்த அதேவேளை

ஏனைய உத்தியோகத்தர்கள் ஞாபகப் பரிசில்களையும்

வழங்கி வைத்து கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.