நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருக்குறீர்கள் என்பதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆலியா பட், அமீர் கான், கோவிந்தா, அக்‌ஷய் குமார், கேத்ரீனா கைஃப், சோனு சூட் உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த வாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் தற்போது சமீரா ரெட்டியும் இணைந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்