புதுக்குடியிருப்பில் ஐவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 8 கொள்ளைச் சம்பவங்கள் அடங்கலாக முல்லைத்தீவு கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்

இவர்களிடம் இருந்து சுமார் 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதோடு இவர்களால் சுமார் 150 பவுன் வரையான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

குறித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்