கண்ணீர் அஞ்சலி…!!! பாலசுப்பிரமணியம் செந்தூரன்

கண்ணீர் அஞ்சலி…!!!
பாலசுப்பிரமணியம் செந்தூரன்

வார்த்தை தடுமாறுகின்றதே தம்பி செந்தூரா!!!

நேற்றுக் கண்ட உனை நினைத்து
நெஞ்சம் உருமாறுகின்றதே!!
காந்தமாய் எமையீர்த்த உனை
காலனுனை கவர்ந்து சென்றதேனோ?
காலமெல்லாம் உம் உறவு
நினைத்துருக காததூரம் எமைவிட்டு
சென்றதேனோ?

மிருதங்க மன்னரின்
இசைமூச்சு நின்றுவிட்டது
என்று சொல்வதா?

இந்த நூற்றாண்டில்
அதிகமாக வாசிக்கப்பட்ட
ஆர்மோனியம் அடங்கிவிட்டது
என்று சொல்வதா?

ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி
மறைந்துவிட்டார் என்று சொல்வதா?

எங்கள் ஊர் மீது
பால்மழை பொழிந்த மேகம்
கடந்துவிட்டது என்று சொல்வதா?

தமிழிசைக்குப்
பொற்காலம் தந்தவனே!
போய்விட்டீரா என்று புலம்புகிறேன்

பல காலமாய்த்
எம்மவர்களை தாலாட்டித்
தூங்கவைத்த கலைஞன்
இன்று இறுதியாக உறங்கிவிட்டான்.

இவனது இசை
இன்பத்துக்கு விருந்தானது;
துன்பத்துக்கு மருந்தானது.

இவனது இசை
தமிழின் ஒரு
வார்த்தையைக்கூட உரசியதில்லை.

இவன் தொடாத ராகமில்லை;
தொட்டுத் தொடங்காத பாடலில்லை.

அமிர்தம் பொழிந்த விரல்களே
காற்று மண்டலத்தையே
கட்டியாண்ட விரல்களே !
நீ தொட்ட உயரத்தை
யாரும் தொடமுடியாது.

கள்ளமில்லா உன் முகத்தை
கட்டிலிலே கண்டவேளை
கலங்கி நின்றே எண்ணிக்கொண்டேன்
கயவன் அந்த கடவுள் என்று…
நீ ஒருமுறை மரணித்தாய் – இனி
உன் நினைவுகள் வரும் நேரங்களில் – நான்
ஒவ்வொரு முறையும் மரணிப்பேனே..
நீ எமைவிட்டு செல்லவில்லை
எம் நினைவுகளில் தங்கிவிட்டாய் .
உன் ஆன்மா சாந்திகொள்ள
தமிழன்னை அவள் தயை புரிவாள் ….

நீங்கா நினைவுகளுடன்
செல்வம் கஜந்தன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்