எச்சரிக்கையான பதிவு அவசரம் பகிர்ந்துதவுங்கள் அம்மை போல் வேகமா பரவும் டெல்டா தடுக்க வழி என்ன?

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பெரியம்மை போல அதிவேகமாக தொற்றும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உருமாறிய கொரோனா குறித்த ஆராய்ச்சியில் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் வந்தவாறே உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள சி.டி.சி. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், டெல்டா வகை கொரோனா வைரஸ் மெர்ஸ், சார்ஸ், எபோலா, ஜலதோஷம், பருவ காய்ச்சல், சிற்றம்மை,பெரியம்மை போல அதிவேகமாக தொற்றும்; எளிதாக பரவும் என கூறியுள்ளது.

மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என கூறும் அந்த அறிக்கையில் தடுப்பூசிகள் நோய்த்தொற்றின் 90 சதவீத தீவிரத்தை தடுக்கிறது.

ஆனால் தொற்றை தடுப்பதிலும், பரப்புவதிலும் குறைவான செயல்திறனைத்தான் கொண்டுள்ளன ஆகவே அனைவரும் கண்டிப்பாக எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என சி.டி.சி தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.