Covid தடுப்பூசியை அவசரம் அனைவரும் போடுங்கள்!

Covid தடுப்பூசியை அவசரம் அனைவரும் போடுங்கள்!

மனித உடலில் பிறபொருளான ( Antigens) நோய்க்கிருமிகள் உட்செல்லும் போது அவற்றை அழிப்பதற்காக உடலின் நோய் எதிர்ப்புக்கு பொறுப்பான நிர்ப்பீடனத்தொகுதி உருவாக்குவதே பிறபொருளெதிரிகள் (Antibodies).

கொல்லப்பட்ட அல்லது பலவீனப்படுத்தப்பட்ட நோய்க்கிருமிகளை மிக மிக சிறியளவில் உடலினுள் உட்செலுத்தும் போது அதற்கு எதிராக உடல் உருவாக்கும் பிறபொருளெதிரிகள் நோய்த்தொற்று ஏற்படும் நேரத்தில் நோய்க்கிருமிகளை உடனடியாக அழிக்க செய்கிறது. இதுவே தடுப்பூசியின் அடிப்படையான தொழிற்பாடு ஆகும்.

ஒரு வெற்றிகரமான தடுப்பூசி என்பது, தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பிற்பாடு குறித்த காலத்தின் பின்னர் குருதியில் பிறபொருளெதிரிகளின் அளவைத் துணிவதன் மூலம் அறியலாம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள படத்தில் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வு கூடத்தினால், தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு செய்யப்பட்ட பிறபொருளெதிரிகளை துணிவதற்கான பரிசோதனை முடிவு ஆகும். அதன் பிரகாரம் “தடுப்பூசிகள் நன்றாகவே வேலை செய்கின்றன”

பொதுவாக கடுமையான கோவிட் அறிகுறிகளுடன் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நோயாளிகள் மிக மிக குறைவு. அநேக இறப்புகளும் தடுப்பூசி போடப்படாத அல்லது ஒற்றை தடுப்பூசி போடப்பட்டவர்கள்தான்.
உங்களால் பெற்றுக் கொள்ள கூடிய தடுப்பூசி எதுவாக இருந்தாலும், இப்போதே அதைனைப் பெற்றுவிடுங்கள். அத்துடன் உங்களுக்கு உரிய காலத்தில் இரண்டாவது ஊசியினையும் பெற்று கொண்டு விடுங்கள்.

இங்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அதனைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகளே ஆகும். இங்கு வழங்கப்படும் அனைத்து தடுப்பூசிகளுமே உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் பெற்றவையே. அதனால் தாராளமாக உடனடியாகவே தடுப்பூசிகளை பெற்று கொண்டு விடுங்கள்.

நீங்கள் தடுப்பூசி பெற்று இருந்தாலும் சில வேளைகளில் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். தடுப்பூசிகள் உங்களுக்கு கோவிட் தொற்று மூலம் கடுமையான அறிகுறிகள் மற்றும் சிக்கல்களைப் பெறுவதைத் தடுக்கிறது. எனவே நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் சமூக இடைவெளியையும் ஏனைய பாதுகாப்பு பொறிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றுங்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.