ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சவால்களை சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது – பிபின் ராவத்…

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எத்தகைய சவால்களையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஆப்கானை தலிபான்கள் கைப்பற்ற இரு மாதங்கள் ஆகும் என நினைத்தோம். ஆனால் இவ்வளவு விரைவாக கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கவில்லை.

ஆப்கானில் ஊடுருவியுள்ள பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கவலை மத்திய அரசுக்கு உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை போல ஆப்கானில் இருந்து வரும் சவால்களையும் சமாளிக்க தயாராக உள்ளோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்