ஓ.பன்னீர்செல்வம் துணைவியார் மறைவு! வைகோ இரங்கல்…

வைகோ இரங்கல்

தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் உயிர் இழந்த துயரச் செய்தி கேட்டு வருந்துகிறேன்.

நான்கு திங்களுக்கு முன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இளைய சகோதரர் பாலமுருகன் அவர்கள் மறைந்தார்.

இடிமேல் இடி விழுந்ததைப் போல, தன் துணைவியாரையும் இழந்து தவிக்கின்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்