பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதை கைவிடுமாறு ஸ்டாலின் கோரிக்கை!

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச துரோக நலனுக்கு எதிரானது.

பொருளாதார நலனுக்கும், சிறுகுறு தொழிலுக்கும் ஆணிவேராக பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்