இந்தியாவில் 30 இற்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் கண்டறிவு.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 37 மருந்துகள் தரமற்றவையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இவ்வாறு கண்டறியப்பட்டுள்ள மருந்துகளில் பெரும்பாலானவை உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஜுலை மாதத்தில் மாத்திரம் 1245 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 1207 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 37 மருந்துகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்துக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்