செய்தியாளர்கள் அழைப்பு! நாள்: 07.12.2021 நேரம்: காலை 11.30 மணி, இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம்

கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வுகளில் முறைப்படி தேர்ச்சி பெற்றும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக போடப்பட்ட சிறு சிறு வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஆட்சியில் பணி ஆணை வழங்காமல் நிராகாரிக்கப்பட்டுள்ளது அதனை மீண்டும் பரிசீலனை செய்து அவர்களின்  வாழ்வாதாரத்தை காத்து காவலராகும் கனவை நிறைவேற்றிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு இதனை கொண்டு சென்று இப்பிரச்சனைக்கு தீர்வு காண அம்மாணவர்களின் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் இன்று 07.12.2021 காலை 11.00 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. தி.வேல்முருகன். அவர்கள் பங்கேற்கிறார். எனவே தங்கள் ஊடகம் மற்றும் பத்திரிகையின் சார்பில் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களை அனுப்பி வைத்து செய்தி சேகரித்து வெளியிட்டு உதவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்