வவுனியாவில் இளைஞனை தாக்கியது பொலீஸ் பதற்றத்தில் ஈடுபட்ட மக்களுடன் சாள்ஸ் உரையாடல்

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இளைஞர்கள் இருவரை தாக்கியதால் அப்பகுதியில் குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கையில், “இன்று மாலை குறித்த பகுதியில் நின்றிருந்த சமயம் ...

மேலும்..

சர்வதேசப் பொறியிலிருந்து படையினரை மீட்டது ஐ.தே.க. – மஹிந்த அணிக்கு விஜேவர்தன பதிலடி

"சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை ஐக்கிய தேசியக் கட்சி அரசே பாதுகாத்தது. எமது புலனாய்வுப் பிரிவு பலவீனப்படுத்தப்படவில்லை." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "புலனாய்வுத் துறையினரை வேட்டையாடுவதற்கோ, புலனாய்வுக் கட்டமைப்பைப் ...

மேலும்..

கூட்டமைப்பைவிட்டு வெளியேறியோர் வென்றார்கள் என்ற சரித்திரம் இல்லை – முன்னாள் எம்.பி. சரவணபவன் தெரிவிப்பு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கூடு. இந்தக் கூட்டை எவராலும் உடைக்கவோ அழிக்கவோ முடியாது. அழிக்க முற்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனமையே வரலாறு." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் ...

மேலும்..

கூட்டமைப்பின் பூநகரிக் கூட்டத்தில் அலைகடலெனத் திரண்டனர் மக்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று பூநகரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர். மாலை 5 மணிக்கு பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் ஜெயக்காந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறப்புரைகளை கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி ...

மேலும்..

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு!

ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மிருசுவில் கொலை வழக்கு குற்றவாளியான சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு எதிராகத் தொடரப்பட்ட நான்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்குகளை எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்கும் ...

மேலும்..

சவால்கள் அனைத்தையும் சிறந்த முறையில் வெற்றிகொள்வேன்- ஜனாதிபதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதிகரித்துள்ள பல மடங்குகளான சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிகொள்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

தனிமைப்படுத்தலுக்கான அறிவுறுத்தலை நிராகரித்து பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம்

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களான அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும், ராஜாங்கன பகுதியில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி கலந்துகொண்ட மரணச் சடங்கு ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளனர். இதனால், ...

மேலும்..

யாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு!

ழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ்.  மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது ...

மேலும்..

தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் யாழில் கொவிட்-19 விழிப்புணர்வு!

நாட்டில் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதனை வடமாகாணத்தில்  கட்டுப்படுத்தும் நோக்குடன், நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் “இலண்டன் என்பீல்ட் நாகபூசணி” ...

மேலும்..

ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை: விசேட விசாரணை முன்னெடுப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் கடந்த 13ஆம் திகதி குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். துஷ்பிரயோகம் சம்பவத்தில் குழந்தையின் தலை, பாலத்தின் ...

மேலும்..

கொரோனா அச்சம் – 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

ஹோமாகம – நுகேகொட நான்காம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் பிரிவில் பெண் சார்ஜண்ட் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே பொலிஸார் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்பது பொலிஸ் அதிகாரிகளும், நான்கு சிவில் பாதுகாப்பு ...

மேலும்..

பதவி விலகினார் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குருபரன்!

கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று (வெள்ளிக்கிழமை) பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி வைத்திருக்கிறார். தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக ...

மேலும்..

சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடையதாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளரால் பொதுத் தேர்தல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களில் தேர்தல் ...

மேலும்..

யாழில் கொள்ளையன் கைக்குண்டுடன் கைது

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் பயணித்த போது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டு தயாரிப்பிலான கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஐவர் இன்று(வெள்ளிக்கிழமை) குணமடைந்துள்ளனர். இதற்கமைய இதுவரையில் மொத்தமாக இரண்டாயிரத்து 12 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இதுவரையில் இரண்டாயிரத்து 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்..