யாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மிருசுவில் பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற பிரதமர் சந்திப்பில் அமைச்சர் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினர் குணமடைந்துள்ளனர். கடற்படை ஊடகப்பேச்சாளர் இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய இதுவரையில் 848 கடற்படையினர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இலங்கையில் மொத்தமாக 904 கடற்படையினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 56 தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்!

பொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஞானசம்பந்தர் ஆதினத்தில் நேற்று(புதன்கிழமை) இவ்வாறு சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பில் ...

மேலும்..

தன் மீதான குற்றசாட்டுக்களை மறுத்தார் இளம் சட்டத்தரணி!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் சட்டத்தரணி மது போதையில் வாகனம் செலுத்தினார் உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுக்களை பொலிஸார் முன் வைத்த நிலையில் அவற்றை குறித்த சட்டத்தரணி மறுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுன்னாகம் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ஊரடங்கு ...

மேலும்..

மட்டக்களப்பு – கொக்குவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கொக்குவில் ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ பெருவிழா நேற்று(புதன்கிழமை) ஆரம்பமானது. சின்ன ஊறணி ஸ்ரீ மாவடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குட பவனியானது கொக்குவில் பிரதான ...

மேலும்..

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய சதி – குமார் சங்கக்கார விசாரணைக் குழுவில் முன்னிலை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும் விசாரணைக் குழுவில் தற்போது முன்னிலையாகியுள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக கூறப்படும் விடயம் தொடர்பாக வாக்குமூலம் ...

மேலும்..

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டு பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளும் சுயாதீனக்குழுக்களும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை ...

மேலும்..

வவுனியாவைச் சேர்ந்த பெண் மகளை கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சி – பிரிட்டனில் சம்பவம்

வவுனியா –  நெடுங்கேணியைச் சேர்ந்த இளம் வயது தாய், பிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் இந்நிலையில், தற்கொலைக்கு முயன்ற தாயாரான சுதா என்பவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் இந்த ...

மேலும்..

187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் தொடர்கிறது

கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் மூவர் 187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய பழுதூக்கிகளை அங்கு உடனடியாக பொருத்துமாறு கோரியே அவர்கள் ...

மேலும்..

தேர்தல் பிரசாரங்களில் எனது ஒளிப்படத்தை பயன்படுத்தக் கூடாது – ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது ஒளிப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதுகாப்பு சேவைகள், பொது நிர்வாகம், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ...

மேலும்..

தரம் 01, 02, முன்பள்ளி ஓகஸ்ட் 10இல் ஆரம்பம் – கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் ஜூலை 07 ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் தரம் 01, 02, முன்பள்ளிகளை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மீளத் திறப்பதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன், கடந்த மார்ச் 16ஆம் திகதி முதல் மூடப்பட்ட அனைத்து கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகளையும் ஜூலை ...

மேலும்..

அரசியல் கைதிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்திவேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் வலியுறுத்து

"சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடன் விடுவிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் ...

மேலும்..

ஓர் ஆசனம்கூடப் பெற வக்கில்லாதவர்கள் கூட்டமைப்பை விமர்சிப்பது வெட்கக்கேடு – மாற்று அணிகளுக்கு சம்பந்தன் சாட்டையடி

"நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் ஓர் ஆசனம்கூடப் பெற  வக்கில்லாத மாற்று அணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பது வெட்கக்கேடானது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் ...

மேலும்..

காணாமற்போனவர்கள் நீண்டகாலமாகியும் வரவில்லை என்றால் அவர்கள் இறந்திருக்கலாம் – பிரதமர் மஹிந்த

காணாமல் போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் சகல பதவிகளிலும் இருந்து நீக்கப்பட்டார் விமலலேஸ்வரி! செயலாளர் துரைராஜசிங்கம் அதிரடி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும் பதவியில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ...

மேலும்..