பிரதான செய்திகள்

வெப்ப வலய நாடுகளுக்கு கடுமையான நெருக்கடி : அமைச்சர் கெஹலிய!

வெப்ப வலய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல் தற்போது மாறி வருகின்றது. இன்று உலகிலுள்ள ஒவ்வொரு ...

மேலும்..

நுவரெலியாவில் தபால் நிலையத்துக்கு முன்பாகப் போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து  நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று (30)போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளையின்போதே தபால் நிலையத்தைமூடி, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ”நுவரெலியா, கண்டி, காலி மற்றும் தியதலாவை ஆகிய நகரங்களில் உள்ள புராதன பெறுமதிக்க ...

மேலும்..

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈட்டிய மேலதிக நிதி ஜனாதிபதியிடம் வழங்கி வைப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 7 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 4 பில்லியன் ரூபாய்க்கான காசோலை நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. நாட்டின் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிசங்க பொதுக் கூட்டம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு முக்கிய ...

மேலும்..

கொக்குவில் நாமகள் வித்தி மாணவர்களுக்கு லயன்ஸ் கழகத்தால் பாடசாலை உபகரணம்!

கொக்குவில் நாமகள் வித்தியாலய மாணவர்கள் சகலருக்கும் லயன்ஸ் கழகத்தினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. கல்லூரி முதல்வரும் லயன்ஸ் கழக ஆளுநர் சபையின் ஆலோசகருமான லயன் ஜெ.ரஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை உபகரணங்களை, மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர், ...

மேலும்..

லயன்ஸ் கழகங்களால் நீரிழிவு நடை பவனி!

  சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை நீரிழிவு நடைபவனியும் இரத்தப் பரிசோதனையும் நடைபெற்றது. யாழ்ப்பாணமட் வண்ணார் பண்ணை சிவன் ஆலய முன்றிலில் ஆரம்பமான நடைபவனி, யாழ். பஸ்நிலையம் ஊடாக யாழ். போதனா வைத்தியசாலை வீதி ஊடாக ...

மேலும்..

200 ஆண்டுகளுக்கு முன் ஒல்லாந்தரால் சூறையாடப்பட்ட தொல்பொருட்கள் இலங்கையிடம் கையளிப்பு

கடந்த 1756 ஆம் ஆண்டு ஒல்லாந்தரால் கண்டி அரச மாளிகையை தாக்கி அங்கிருந்து சூறையாடப்பட்ட 6 தொல்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து இன்று காலை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட தொல்பொருட்களில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் திருமண வாள், மன்னரின் தங்கக் ...

மேலும்..

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் விஜயம்!

  மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் சாண்டிலே எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) விஜயம் செய்து, சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஒல்லாந்தர் கோட்டையினை பார்வையிட்டுள்ளார். அங்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகருடன் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை ...

மேலும்..

நெல்லை உட்கொண்ட காட்டு யானையின் தாக்குதலில் சுவர் இடிந்து வீழ்ந்து இளைஞர் பலி!

சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இளைஞர்கள் குழுவுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில்  அது இடிந்து வீழ்ந்து 19 வயது இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சீகிரிய கிபிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த அவிந்த இஷான் சமரநாயக்க ...

மேலும்..

முல்லைத்தீவின் மூத்த தவில் வித்துவான் இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை காலமானார்!

முல்லைத்தீவின் மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமான இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை இன்றைய தினம் புதன்கிழமை (29) அதிகாலை காலமானார். முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட இவர், 'முல்லைக் கலைக்கோன்', 'கலாபூஷணம்', 'முல்லை பேரொளி' ஆகிய விருதுகளை பெற்ற இசை மேதையாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் ...

மேலும்..

யாழ்.நோக்கிச் சென்ற பேருந்துக்கள் மீது அநுராதபுரத்தில் கல் வீச்சு

கொழும்பில் நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் யாழ். நோக்கி வந்த பேருந்து உள்ளிட்ட மூன்று பேருந்துகள் மீது அநுராதபுர பகுதியில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் - நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...

மேலும்..

இத்தாலியில் மூளைச்சாவடைந்த இலங்கையரின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவரது மனைவி, ...

மேலும்..

ஓமானில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் பெண் தொடர்பில் பெற்றோர் கூறுவது என்ன?

ஓமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த 39 வயதான ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர் ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். ஆனமடுவ குமாரகம பிரதேசத்தைச் ...

மேலும்..

மாவீரர்நாளில் பொலிஸாரின் நடவடிக்கை நல்லிணக்கம் தொடர்பான அரசாங்கத்தின் இரட்டை நிலையை காட்டுகின்றது

மாவீரர் நாள் நினைவேந்தல் பொலிஸாரால் சீர்குலைக்கப்பட்டமை உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தின் இரட்டை தோற்றம் இவ்வாறான சம்பவங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நல்லிணக்கத்திற்கான சிறந்த வழியாக இருக்கக்கூடிய இவ்வாறான நினைவேந்தலைக் கூட அரசாங்கம் அனுமதிக்காவிட்டால், இந்த ...

மேலும்..

ஒழுக்க விழுமியங்களுக்கு மாறாக செயற்பட்டால் பதவி நீக்கலாமாம்! ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டென்கிறார் பந்துல

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்கட்சியுடன் இணைந்து பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் ஆளும் கட்சியில் ...

மேலும்..