இலங்கை செய்திகள்

பொதுமக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் – ரணில் உறுதி

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் ஒவ்வொரு துறையையும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் ...

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இயக்கச்சி பகுதியிலுள்ள ஒரு வீடு ஒன்றிலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்தவருக்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ...

மேலும்..

தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 152பேர் வீடுகளுக்கு திரும்பினர்

வவுனியா- வேளான்குளம், வன்னி விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர், தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குறித்த 152 பேரும், பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதில் அதிகமானோர், கொழும்பு, ...

மேலும்..

கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு மாணவன் உயிரிழப்பு- கல்முனையில் சோகம்

கல்முனை பகுதியிலுள்ள குளமொன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட  பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயின்று வந்த, மோ.ஜதுர்சன்(வயது. 10) ...

மேலும்..

எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் – பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது என்றும் எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் என்று கூட குறிப்பிடலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்தை  பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார ...

மேலும்..

விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் – ஜனாதிபதி

தற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்ட ஜனாதிபதி விவசாயிகள் முகங்கொடுத்துவரும் நீர் மற்றும் ஏனைய ...

மேலும்..

சரித்திரம் படைக்கும் கூட்டமைப்பு – இரா. சம்பந்தன்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்று சரித்திரம் படைக்கும் என அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கை தனக்கு உள்ளது என குறிப்பிட்ட அவர் அனைவரும் தவறாது வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் ...

மேலும்..

கொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில், நேற்று மட்டும் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,069 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர்களில் இருவர் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: பிரான்ஸில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், சுமார் 1 மாதகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மேலும் ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சவச்சாலையில்

பாறுக் ஷிஹான் கனரக வாகன விபத்தில் சிக்கி மரணமான பாடசாலை மாணவனின் சடலம்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை(3) மாலை   குளம் ஒன்றினை  புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு  குறித்த மாணவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ...

மேலும்..

விமர்சனங்களைக் கண்டு நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன்! – மஹிந்த அணிக்கு மைத்திரி பதிலடி

"பதாதைகளில் இருக்கும் எனது பெயர் மற்றும் உருவத்தை மறைக்கலாம். ஆனால், பொலனறுவை மக்களின் உள்ளத்தில் பதிந்திருக்கும் எனது பெயரை யாராலும் மறைக்க முடியாது. அத்துடன் எமது கூட்டணியில் இருக்கும் சிலர் எனக்கு எதிராக மேற்கொண்டுவரும் விமர்சனங்களைக் கண்டு நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன்." - ...

மேலும்..

ராஜபக்சக்கள்தான்  முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த எதிரி – அடித்து, அதட்டி, அச்சுறுத்தி வாக்குப் பெற முடியாது என்கிறார் அஸாத் ஸாலி

"இலங்கையில் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த எதிரியாக ராஜபக்சக்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அடித்து, அதட்டி, அச்சுறுத்தி முஸ்லிம்களிடம் வாக்குப் பெறமுடியாது." - இவ்வாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஸாத் ஸாலி தெரிவித்தார். இது தொடர்பில் அவரின் ஊடகப் பிரிவு ...

மேலும்..

வெற்றியிலே பங்குதாரராகுங்கள்! – முல்லைத்தீவில் சஜித் தலைமையிலான கூட்டத்தில் ரிஷாத் அறைகூவல்

"இன ஐக்கியத்தையும் சமூகங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் சமாதானத்தையும் நேசிக்கின்ற சக்திகளே சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்திருக்கின்றார்கள். சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் ஒழிந்து, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அதீத சிந்தனை கொண்டவராக அவரைக் காண்கின்றோம். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு மக்கள் ...

மேலும்..

பொது நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு பிள்ளையானே காரணம். முதல்வர் சரவணபவன் குற்றச்சாட்டு…

மட்டக்களப்பு பொது நூலகத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனே காரணம் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்றைய தினம் (02.07.2020) புளியந்தீவு பகுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் ...

மேலும்..

மார்ச், ஏப்ரல், மே மாதங்களின் மின் கட்டணத்தில் சலுகைகள் – அரசு அதிரடித் தீர்மானம்…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மின் பாவனையாளர்களின் நலன் கருதி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாத மின் கட்டண அறவீடுகளின்போது சலுகைகளை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அது தொடர்பாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர  சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் ...

மேலும்..