இலங்கை செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. 20 ஆயிரம் ரூபா ...

மேலும்..

விழிப்படைய வேண்டும் இல்லாவிட்டால் அழிந்துவிடுவோம் – சுகாஷ் எச்சரிக்கை

கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மறுபுறம் சீனா போன்ற நாடுகளிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் ...

மேலும்..

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை 6 மாதங்களுக்குள் முற்றாக நிறுத்தத் திட்டம்!

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள்  முற்றாக நிறுத்துவதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளனர் என மேல் மாகாணத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். பாதாள உலக செயற்பாடுகள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து வழிநடத்தப்படுகின்றமை தற்போது தெரிய ...

மேலும்..

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி புலத் சிங்களவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

புலத்சிங்கள பகுதியில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பகுதி மக்கள் தீ பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். புலத்சிங்கள தேசிய மக்கள் படையின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன அமரசேகரவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தைக் குறைக்க முடியாவிட்டால் ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதிகள் இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாடுகளின் தடைகளால் பெரும் அவமானமாம்! சரத்வீரசேகர ஜனாதிபதிக்குக் கடிதம்

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், முன்னாள் ஜனாதிபதிகள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அவமானகரமான நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார். 25 ஆம் திகதியிடப்பட்ட ...

மேலும்..

போதைக்கு அடிமையாகி சொந்த வீட்டையே எரித்த இளைஞன் காத்தான்குடியில் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் இளைஞர் ஒருவர் சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக 27 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் ...

மேலும்..

விலையை கட்டுப்படுத்த முடியாமல் போனால் அரிசியை இறக்குமதி செய்யவேண்டியிருக்கும்! வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறுகிறார்

நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட  அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் விலையை கட்டுப்படுத்த முடியாது போனால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டி ஏற்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க ...

மேலும்..

பயணப் படகு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று விஜயம் செய்துள்ளார். குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணத்தை மேற்கொள்ளும் படகுகளுக்கு இறங்கு துறையில் இடங்கள் ஒதுக்கப்படாததால் , படகுகளை கரை சேர்ப்பதற்கும் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதிலும் இடர்களை ...

மேலும்..

முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 4 பேர் காயம் – யாழில் சம்பவம்

வேகமாக சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, கடலை அண்மித்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இன்று (29) பகல் இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம், பண்ணை ...

மேலும்..

இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம்

ஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில்; ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இன் வருகையை முன்னிட்டு ...

மேலும்..

அரச நிறுவனங்களுக்கு இடையிலான மோதல்களால் அபிவிருத்தி திட்டங்கள் தாமதமாகின்றன – பிரசன்ன ரணதுங்க

சீன அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக எழுமடுவ மற்றும் மஸ்மடுவ காணிகளின் உரிமை தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையிலான இழுபறியை உடனடியாக நிறுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் ...

மேலும்..

கலாநிதி ஆர்.விஜயகுமார் பேராசிரியராக பதவியுயர்வு!

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பணியாளர் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளரும்இ முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆர். விஜயகுமாரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலைப் பல்கலைக்கழகப் பேரவை சனிக்கிழமை வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இ 28ஆம் ...

மேலும்..

அணுகுமுறை மாற்றம் அவசியமானால் கட்சிக்குத் தலைமை மாற்றம் தேவை! சீ.வீ.கே.சிவஞானம் வலியுறுத்து

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அணுகுமுறை மாற்றம் அவசியமானால் கட்சிக்குத் தலைமை மாற்றம் தேவையாக உள்ளதென தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், வடமாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - தமிழ் ...

மேலும்..

பெரமுன ஆதரவை ஜனாதிபதி சாதாரணமாகக் கருதிவிட்டார் ; ரமேஸ் சுகாதார அமைச்சர் பதவியை 3 முறை நிராகரித்தார்! சாகர காரியவசம் கூறுகிறார்

பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் தனக்கு வழங்கிவரும் ஆதரவை ஜனாதிபதி மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளார். அதன் முக்கியத்துவத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். கேள்வி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் நீங்கள் சமீபத்திய ...

மேலும்..

74 ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் தமிழரசு மாநாட்டை நடத்த முஸ்தீபு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி வவுனியாவில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் குறித்த கூட்டத்தில், கட்சியின் வருடாந்த மாநாட்டை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..