இலங்கை செய்திகள்

சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உறுதி

அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மங்களராமய அம்பிட்டிய சுமண தேரர் தமிழர்களை வெட்டுவேன் என்பதுள்ளிட்ட இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிட்டு வரும் ...

மேலும்..

ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்

அகில இலங்கை சைவ மகா சபையுடன் யாழ். பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை இணைந்து 'ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்' எனும் தொனிப்பொருளில் நடத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை ஆரம்பமானது. பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை ...

மேலும்..

எந்தவொரு பிரச்சினைக்கும் போர் உரிய தீர்வு ஆகாதாம்! அமைச்சர் ஜீவன் இடித்துரைப்பு

பாலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலையை காணும்போது கவலையளிக்கின்றது எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன் ...

மேலும்..

சம்பந்தன் பதவி விலக வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பையே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ...

மேலும்..

இனவாதத்தை தூண்டும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரை உடன் கைதுசெய்ய வேண்டும் – வேலுகுமார்

சமூகத்தில் இனவாதத்தை விதைத்து - அதனை நாடெங்கும் பரப்பி மீண்டும் இன முறுகலை தோற்றுவிப்பதற்காக தொடர்ச்சியாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் அமைச்சர் ஜீவன் முறைப்பாடு

இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இவ்விவகாரம் ...

மேலும்..

இரு உணவகங்களுக்கு யாழ்ப்பாணத்தில் ‘சீல்’!

யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்பட்ட உணவகமும் சுகாதார பிரிவினரின் அனுமதி பெறாது இயங்கிய உணவகமும் நீதிமன்ற கட்டளையில் சீல் செய்யப்பட்டு மூடப்பட்டன. யாழ்ப்பாணம் மாநகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு புழுவுடன் உணவு ...

மேலும்..

தேசிய நல்லிணக்கத்தைச் சிதைக்கும் அம்பிட்டிய தேரர் போன்ற பிரகிருதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துக! அமைச்சர் டக்ளஸூம் காட்டம்

தேசிய நல்லிணக்கத்தைச் சிதைக்கும் வகையிலான எகத்தாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் தரம் கெட்ட வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனையளிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பிட்டிய ...

மேலும்..

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பம்!

உயர் பாதுகாப்பு வலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, தையிட்டி பகுதியில் மக்களது காணிகளை சுவீகரித்து சட்டவிரோத திஸ்ஸ விகாரையானது அமைக்கப்பட்டது. இந்த விகாரைக்கு காணியின் உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தின. இந்நிலையில் ...

மேலும்..

மன்னாரில் 315 ஜெலட்னைட் குச்சிகளுடன் ஒருவர் கைது!

மன்னார் பிரதான தபாலக வீதியில் வைத்து ஒரு தொகுதி ஜெலட்னைட் (டைனமெட்) குச்சிகளுடன்  வெள்ளிக்கிழமை மதியம் ஒருவர் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 315 ...

மேலும்..

யாழிலுள்ள மதுபானசாலைகள் பற்றிய விவரங்கள் தகவலறியும் சட்டமூலமூடாக கேட்டும் பதிலில்லை!  சிறிதரன் குற்றச்சாட்டு

யாழ்.மாவட்டத்தில்  எத்தனை மதுபான சாலைகள்  உள்ளன என தகவலறியும் சட்டமூலம் ஊடாக கேட்டும் பதில் இல்லை  என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டியுள்ளார். யாழ்.மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றபோது மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் கலந்துரையாடப்பட்டவேளை  அவர் இதனைத் தெரிவித்தார் . மதுவரிதிணைக்களத்தின் ...

மேலும்..

பம்பலபிட்டி ரயில் நிலையத்துக்கு தற்காலிக நுழைவுப்பாதை அமைப்பு

இலங்கையில் சுமார் 30 வருடகால பழமையான பாலங்கள் இருக்கின்றன என வீதி அபிவிருத்தி அதிகாரசபை மதிப்பிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்நிலையில்,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு 10 நாள்களுக்குள் ...

மேலும்..

‘டக் டிக் டோஸ்’ இசை வெளியீடு!

'டக் டிக் டோஸ் ' முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த பிரபல இயக்குநரான 'ராஜ் சிவராஜின் இயக்கத்தில், பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவாகியுள்ள இத் திரைப்படம் மிக விரைவில் திரைக்கு ...

மேலும்..

கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர சூழ்ச்சி! எம்.ஏ.சுமந்திரனை வைகிறார் தவராசா

அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்கிறார் என சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதமொன்றை எழுதியுள்ள அவர், ...

மேலும்..

பாலஸ்தீனியர்களுக்காக கல்முனை மக்கள் ஆதரவு!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் வெள்ளிக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப்பகுதி மக்களால் துஆ பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும்..