இலங்கை செய்திகள்

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டதுக்கு அரச அதிகாரிகள் பங்களிப்பு அவசியம் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறைந்த ...

மேலும்..

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவு தேசிய மட்டத்தில் ஏன் விலையை குறைக்கவில்லை?  அநுரகுமார கேள்வி

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் கோதுமை மாவின் விலையை அரசாங்கம் ஏன் குறைக்கவில்லை. அனுமதி பத்திரம் இல்லாதவர்கள் கோதுமை மா இறக்குமதி செய்வதை தடை செய்து விட்டு இரு பிரதான நிறுவனங்களுக்கு மாத்திரம் கோதுமை மா விநியோகத்தில் ...

மேலும்..

வவுனியா நகர பகுதில் தீப்பற்றிய உணவகம்!

வவுனியா நகரில் அமைந்துள்ள உணவகமொன்று புதன்கிழமை இரவு 8.25 மணியளவில் திடீரேன தீப்பற்றியமையையடுத்து பலத்த போராட்டத்தின் மத்தியில் தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கண்டி வீதியில் இரண்டாம் குருக்கு வீதி சந்தியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்று இரவு திடீரென தீப்பற்றி ...

மேலும்..

18,000 தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க விசேட குழு!  சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய கூறுகிறார்

டெங்கு ஒழிப்புப் பிரிவு ஊழியர்கள் உட்பட அரச சேவையில் பல துறைகளில் சேவையில் உள்ள 18 ஆயிரம் தற்காலிக சேவையாளர்களுக்கு  நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்குச் செயற் குழு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதற்கான உத்தியை விரைவாக நடைமுறைப்படுத்த செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வடக்கு மக்கள் குருநாகலையில் பெற்றலாமாம்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவையை வவுனியாவில் ஆரம்பிக்க பௌதீக வளம் கிடையாது. இந்த ஆண்டு இறுதி பகுதியில் குருநாகல் மாவட்டத்தில் தேசிய அடையாள  அட்டை ஒருநாள் சேவை விநியோகம் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாணத்தில் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் வரை வடக்கு ...

மேலும்..

ஒருநாள் அடையாள அட்டை சேவை வடக்குக்கு வவுனியாவில் வேண்டும்! சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை

ஒருநாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கு கொழும்புக்கு வருகை தரும் வடக்கு  மாகாண மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். ஆகவே, சிரமங்களுக்குத் தீர்வாக வவுனியாவில் ஒரு நாள்  சேவை ஊடாக தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பிரிவு ஒன்றை ...

மேலும்..

களனிப் பாலத்தில் ஆணிகளை அகற்ற விசேட பொறியியலாளர்; வரவேண்டும்! 5.9 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்கள் மாயம் என்கிறார் பந்துல

களனி கல்யாணி நுழைவாயில் பாலத்தில் ஆணிகளை எவரும் திருடவில்லை. ஆணிகளை அகற்ற விசேட பொறியியலாளர்கள் வருகை தர வேண்டும். நீர் குழாய்,பல வர்ண மின்குமிழ்கள் உட்பட 5.9 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்களே மாயமாகியுள்ளன. நெடுஞ்சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் ஆகியவற்றின் பாதுகாப்பை ...

மேலும்..

காணிகளை விடுவிப்பதற்கான மக்கள் கோரிக்கை நியாயம்! ஏற்றுக்கொள்கிறார்  பவித்திரா

வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அப்பகுதிகளில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன வள பாதுகாப்பு திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவை நிச்சயம் விடுக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் ...

மேலும்..

வட மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தன…T

வட மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் கூட்டாக இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தன. *அன்னலிங்கம் அன்னராசா (செயலாளர் ,ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சாமாசம்) *எம்.வி சுப்பிரமணியம் (தேசிய அமைப்பாளர்,அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு) *மடுத்தீன் பெனடிக்ற் ((தலைவர்,மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் சங்கம்) *இ.சந்திரமௌலி (உப தலைவர் ,கரைச்சி வடக்கு மீனவர் சமாசம்) ஜனாதிபதி அவர்கள் மோடியுடன் ...

மேலும்..

டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி! கோதுமை மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..T

அனுமதி பத்திரம் இல்லாதவர்கள் கோதுமை மா இறக்குமதி செய்வதை தடை செய்து விட்டு இரு பிரதான நிறுவனங்களுக்கு மாத்திரம் கோதுமை மா விநியோகத்தில் தனியுரிமை வழங்கப்பட்டுள்ளமை முறையற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (19.07.2023) ...

மேலும்..

மற்றுமொரு தேரரின் மோசமான செயல் அம்பலம் – பொலிஸார் கைது..T

மச்சவாச்சியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் தேரர் ஒருவரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது. மச்சவாச்சி - வனமல்கொல்லாவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்து வாழ்ந்து வரும் 59 வயதுடைய தேரர் ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி!..T

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகனும் பரிதாபகரமாகச் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அனுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (19.07.2023) இரவு 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் பயணித்த மோட்டார் ...

மேலும்..

இலங்கையில் சர்ச்சைக்குரிய ஊசியால் மற்றுமொரு மரணம்..T

கேகாலை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட நுண்ணுயிர் ஊசிகளால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த 10ஆம் ...

மேலும்..

அதிகாலையில் அதிரடி படையினரின் நடவடிக்கை – சுட்டுக்கொல்லப்பட்டு முக்கிய பெரும்புள்ளி..T

மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மினுவாங்கொடையில் இந்த துப்பாக்கிச்கூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹோமாகமவில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே விசேட அதிரடிப்படையினரால் ...

மேலும்..