இலங்கை செய்திகள்

வவுனியாவில் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புத் தொழுகை

வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புத் தொழுகை பட்டாணிச்சூர் 5ம் ஒழுங்கை குடா வயல் திடலில் இன்று காலை இடம்பெற்றது. ஜமாத்தின் தலைவர் அஷ்ஷேய்க் ஸாதிகீனால் (பாரி) நடத்தப்பட்ட இத் தொழுகையில் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.    

மேலும்..

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.40 அளவில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர உத்தியோகத்தர் ...

மேலும்..

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியாது : ஹர்ஷ டி சில்வா!

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த மறுசீரமைப்புச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, ...

மேலும்..

அராலியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – அராலி, வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று நண்பகல்  இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , 37 வயதான மகேஸ்வரன் மயூரன்  என்பவரும்  அராலி ...

மேலும்..

மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது : இரா.சாணக்கியன்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயத்தில் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ...

மேலும்..

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய இணங்கப் போவதில்லை : சுமந்திரன்!

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துத் ...

மேலும்..

ஊழியர் சேமலாப நிதிக்கு ஆபத்தா? : மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

ஊழியர் சேமலாப நிதி மீது அரசாங்கம் கை வக்காது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஊழியர் சேமலாப நிதி ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பால் மக்களுக்குப் பாதிப்பில்லை : காமினி லொக்குகே!

கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதால், நாட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதை ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு குறித்து, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ...

மேலும்..

தன்னலம் கருதாத ஒரு நல்ல உள்ளம் இறைவனடி சேர்ந்தது!!சமூக சேவையாளர் அருள்நாதன் அகால மரணம்!!கவலையில் தத்தளிக்கும் காரைதீவு மண்…

அருள்நாதன் என்னும் அறம் இந்த அறம் இன்று நம் எல்லோரையும் விட்டு இறைவனடி சேர்ந்து விட்டது,கல்விக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல் கடல் கடந்த தேசத்தில் வாழ்ந்து தாயகம் திரும்பி இடைவிடாது சேவையை தொடர்ந்தவர். இந்த மண்ணிற்கும் மக்களுக்குமாக பல வருடங்களாய் ஏழை, பணக்காரன் ...

மேலும்..

கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழா

கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கனடாவுக்கான இலங்கை தூதரகத்தில் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பில் உள்ள தூதரகத்தில் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் தலைமையில் இடம் பெற்றது. வரவேற்பு நிகழ்வில் ...

மேலும்..

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளது. புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர நிகழ்வுகள் அரசாங்கத்தின் அனுசரணைடன் இம்முறை இடம்பெறவுள்ளன. பெல்லன்வில விகாரையின் எசல நிகழ்வுகள் 73 ஆவது முறையாக ...

மேலும்..

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமனம்!

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. அத்துடன் இலங்கை விமானப்படையின் தற்போதைய பதவி நிலைப் பிரதானியான எயார் வைஸ் மார்சல் உதேனி ...

மேலும்..

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 140 ஆவது நிறுவுனர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் சூழல் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளும்…

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 140 ஆவது நிறுவுனர்கள்(ஸ்தாபகர்கள்) தினத்தை முன்னிட்டு 2023.06.28 அன்று "அனைத்து மதங்களையும் கண்ணியப்படுத்துவதுடன் சுற்றாடலைத் தூய்மையாய் பேணுவோம்" எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குகொண்ட விழிப்புணர்வு ஊர்வலமும் அதை தொடர்ந்து கல்முனை சந்தான ஈஸ்வரர் ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் அஸ்வெசும திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்யுங்கள்! பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்ரவரன் கோரிக்கை

  முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசின் அஸ்வெசும திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மேன் முறையீடு செய்யுங்கள் என முல்லைத்தீவு மாவட்டத்தில் பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்ரவரன் தெரிவித்துள்ளார். அஸ்வெசும கொடுப்பனவில் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை கேப்பாபிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடி ...

மேலும்..

இலங்கையில் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது – புதிதாக பௌத்த ஆலயங்கள் – லண்டனில் அண்ணாமலை கவலை

இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கைகுறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து அண்ணாமலை உரையாற்றியுள்ளார். பிரிட்டனின் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்தஇந்த நிகழ்வில் ...

மேலும்..