December 9, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அலரிமாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்த நபர் கைது!

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் பம்பலப்பிட்டி ...

மேலும்..

இன்றைய வானிலை அறிக்கை..

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என ...

மேலும்..

யாழில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம்

யாழ்ப்பாணத்தில் மாண்டஸ் சூறாவளி தாக்கத்தினால் பாரிய மரங்கள் வீதியின் குறுக்காக வீழ்ந்து கிடப்பதைக் காணலாம்.

மேலும்..

உள்ளூராட்சி சபைகள் சுகாதாரத்துறையை நவீனமயப்படுத்த வேண்டும்-நகரசபை உறுப்பினர் விஜயேந்திரன்

சாவகச்சேரி நிருபர் உள்ளூராட்சி மன்றங்கள் வீதி அபிவிருத்தியோடு மட்டும் நின்றுவிடாது ஏனைய உட்கட்டமைப்பு விடயங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் வீ.விஜயேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற அமர்வில் வரவு-செலவுத் திட்டம் தொடர்பாக உரையாற்றிய போதே அவர் இதனைக் ...

மேலும்..

பூம்புகார் சண்முகா முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

சாவகச்சேரி நிருபர் சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தினால் 05/12 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பூம்புகாரில் அமைந்துள்ள முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த உதவித்திட்டம் மாவட்ட ரோட்டரிக் கழகத்தின் நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

தம்பகாம்ம் மற்றும் புலோப்பளை பகுதிகளில் உள்ள ஆலயங்களில் திருட்டு!!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாம்ம் மற்றும் புலோப்பளை பகுதிகளில் உள்ள இருவேறு ஆலயங்களில் திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர்.பளை பிரதேசத்தில் தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதிகளவில் ஆலயங்களிலேயே திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.பளை பிரதேசத்தில் கடந்த தினங்களில் கச்சார் ...

மேலும்..

சீரற்ற காலநிலையால பாதிப்படைந்த பளை பிரதேசம்!

பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்கள் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளத்தாலும் கடும் காற்றுனாலும் பாதிப்படைந்துள்ளன. புலோப்பளை வேம்போடுகேணி வண்ணாங்கேணி என பல கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன. வெள்ளநீர் உட்புகுந்தும் மரங்கள் முறிந்து விழுந்துமாக மக்கள் பாரிய அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.

மேலும்..

இன்றைய ராசிபலன் 10 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்ப விஷயமாக உங்கள் யோசனையைக் கேட்டு வருவார்கள். முக்கியமான முடிவு எடுப்ப தற்கு உகந்த நாள். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனதில் ஏற்பட்டிருந்த குழப் பங்கள் நீங்கும். வியாபாரத்தில் ...

மேலும்..

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பேச்சாற்றல் மற்றும் கதாப்பிரசங்கம் ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வு…

நாவலர் ஆண்டு – பிரகடனத்தை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 200 ஆவது ஜனன ஆண்டிலே இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றம் இந்து சமய மாணவர்களிடையே நடத்தும் பேச்சாற்றல் மற்றும் கதாப்பிரசங்கம் ஆளுமைத்திறன் வெளிக்கொணர்வு நிகழ்வு விடய அறிவுறுத்தல் - (இந்து ...

மேலும்..

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது மாடியில் இருந்து கீழே வீழ்ந்து மரணம்

வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பில் பணியாற்றும் வேலைத்தளத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வவுனியா, குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41 வயதுடைய கனகசபை ரஜித் நிலோசன் என்ற நபர் கொழும்பில் தங்கியிருந்து மின்னிணைப்பு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். வேலைத்தளத்தில் நேற்றையதினம் ...

மேலும்..

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு – வைத்தியர் தீபல் பெரேரா தெரிவிப்பு!!

போதைப்பொருளிற்கு அடிமையாகும்  இளம் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார். இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிக்கின்றது இவ்வாறு பாதிக்கப்பட்ட இருபது முதல் முப்பது வீதமான பெற்றோரின் பிள்ளைகள் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் ...

மேலும்..

அரிசி இறக்குமதிக்கு தடை – ரணில் அதிரடி உத்தரவு

அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால், அரிசி இறக்குமதியை இடைநிறுத்துமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் விவசாய ...

மேலும்..

இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்கள்!!

இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் இரட்டை சகோதரர்களை, இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்த ஆச்சரிய நிகழ்வு நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள குர்மன் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுர் சந்திரா சான்ட்ரா. இவரது மகள்களான அர்பிதா - ...

மேலும்..

இலங்கையை நோக்கி வரும் சூறாவளி மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு

இன்று காலை 5.30 மணிக்கு அவதானிக்கப்பட்ட ,புள்ளி விபரங்களின் படி, சூறாவளியின் நகர்வு பாதையானது எதிர்பார்த்ததை விட இலங்கைக்கு அண்மையாகவே சென்று கொண்டு இருக்கிறது. இன்றும் பலத்த மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் வீசுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு ...

மேலும்..

ஸ்பெயின் – பயிற்றுவிப்பாளர் பணி நீக்கம்…

ஸ்பெயின் தேசிய அணிப் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் என்ரிக்கேயைப் (Luis Enrique) பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி knockout எனும் 'தோற்றால் வெளியேறும்' சுற்றில் ஸ்பெயின் பெனல்ட்டி கோல்களில் 0-3 என்ற எண்ணிக்கையில் மொரோக்கோவிடம் படுதோல்வியுற்றது. இந்நிலையில் காலிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை ...

மேலும்..

பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் மாற்றமடைந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், பால்மாவின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன இந்த விலை மாற்றத்திற்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க குறித்த நிறுவனங்கள் ...

மேலும்..

வரவு -செலவு திட்டம் நிறைவேறியது

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எதிராக 80 வாக்குகளும் ஆதரவாக 123 வாக்குகளும் செலுத்தப்பட்டன. இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகிய ...

மேலும்..

புலம்பெயர்ந்தோரின் முதலீட்டுக்கு அவசியம் முறையான அரசியல் தீர்வு; கூட்டமைப்பு வலியுறுத்தல்!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைத்தால் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிச்சயமாக முதலீடு செய்வார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (08.12.2022) ...

மேலும்..

பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

அஸர்பைஜான் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 பேரையும், கடத்தலுக்கு தலைமை தாங்கிய கஹதுடுவ பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரையும் கைது செய்ததாக கஹதுடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அஸர்பைஜான் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறு கஹதுடுவ பிரகதி மாவத்தை பகுதியிலுள்ள ...

மேலும்..

வைரவிழா போட்டிகளைப் பிற்போடல் தொடர்பான அறிவித்தல்

சாவகச்சேரி நிருபர் அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தின் வைர விழாவை முன்னிட்டு நடைபெறவிருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் திறந்த மட்ட போட்டியாளர்களுக்கான சைவசமயப் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளுக்கு பிற்போடப்பட்டிருப்பதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் எதிர்வரும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 9 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ...

மேலும்..