November 25, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மலையக மக்கள் முன்னேற்றத்துக்கான சகல தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு! சிறிதரன் உறுதியளிப்பு

முன்னாள் ஜனாதிபதி ஜே .ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையிலும் ,ஈழ விடுதலைப் போராட்டத்திலும் பெரியளவில் தங்களைத் தியாகம் செய்த மலையக மக்கள் தான்  இலங்கையின் பொருளாதாரத்தை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள். எனவே அவர்களுக்கான காணி உரிமை,சம்பள அதிகரிப்புக்கள் உடனடியாக வழங்கப்பட ...

மேலும்..

புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் மட்டக்களப்பில் வைத்துக் கைது!

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவருமான சங்கரப்பிள்ளை நகுலேஸ் கைது செய்யப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டக்களப்பு அம்பாறை தலைமைக் ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் நடேசனை புகழ்ந்துதள்ளும் பௌத்த துறவி

தமிழீழ விடுதலைப்புலிகளின் காவற்துறை பொறுப்பாளர் நடேசனை முன்னாள் இராணுவச் சிப்பாயும் தற்போதைய பௌத்த பிக்குவுமான எகிரியே சுமன தேரர் புகழ்ந்து பாராட்டியுள்ளார். மிக இள வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர் தான் கடமையாற்றிய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை கைது ...

மேலும்..

கிரிக்கெட் தொடர்பான அமைச்சரவை உபகுழு நியமனம் அமைச்சரின் அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கானதல்ல சுசில் விளக்கம்

கிரிக்கெட் தொடர்பில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட உப குழு தற்போது கிரிக்கெட் தொடர்பில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காகவேயன்றி விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிகாரங்களை இல்லாதொழிப்பதற்கல்ல என சபை முதல்வரும் அமைச்சருமான  சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அமைச்சரவையில் எடுக்கப்பட்ட ...

மேலும்..

ஆட்சியிலிருந்த சகல அரசாங்கங்களும் போலியான வாக்குறுதிகளே வழங்கின! மலையக மக்கள் தொடர்பில் விஜித ஹேரத் கருத்து

ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும்  பெருந்தோட்டத்துறை மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. நவீன காலத்திலும் அவர்கள் முகவரியற்றவர்களாக வாழ்கிறார்கள். இதனால் இவர்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்தியத் தமிழர்கள் என்ற அடிப்படையில் பார்க்காமல் இலங்கையர்கள் என்ற ரீதியில் ...

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் போது நேரடி ஒளிபரப்பு செய்கின்றமையை நிறுத்துக! திஸ்ஸ குட்டியாராச்சி கோரிக்கை

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் பேசும்போது மாணவர்களை பார்வையாளர் கலரிக்கு அனுமதிக்க வேண்டாம். அத்துடன் அவர் பேசும் நேரத்தில் சபை நடவடிக்கைகள்  நேரடியாக ஒளிபரப்பப்படுவதையும் நிறுத்த வேண்டும் என அரச தரப்பு எம்.பி.யான திஸ்ஸ குட்டியாராச்சி வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை ...

மேலும்..

பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைவரும் ஒத்துழைப்பு வழங்குக! அமைச்சர் ஜீவன் கோரிக்கை

பெருந்தோட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். பெருந்தோட்ட பகுதிகளில் 44 சதவீதமளவில் குடிநீர் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக வழங்கப்படும் குடிநீரை காட்டிலும் ஊற்று நீர் தூய்மையானது என பெருந்தோட்டங்களில் பெரும்பாலானோர் கருதுகிறார்கள். போதிய விழிப்புணர்வு கிடையாது ...

மேலும்..

கூட்டு ஒப்பந்தமின்மையால் தோட்ட கம்பனிகள் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றனவாம்!  இராதாகிருஸ்ணன் குற்றச்சாட்டு

சம்பள நிர்ணய சபையா அல்லது கூட்டு ஒப்பந்தமா என்று தற்போது பேசப்படுகிறது.என்னை பொறுத்தவரை  கூட்டு ஒப்பந்தம் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தால் தோட்ட கம்பனிகள் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றன. ஆகவே கூட்டு ஒப்பந்தம் தொடர்பான தீர்மானங்களுக்கு ...

மேலும்..

நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த சிங்கள இளைஞர்களே முன்வருக!  சிறிதரன் எம்.பி. அழைப்பு

ஈழத்தமிழர்களின் நெடுங்கால மரபுகளின் வழி இம்முறையும், இனிவரும் காலங்களிலும் எமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தி  வழிபடுவதன் மூலம் எங்களை நாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்கின்ற நினைவேந்தல் நிகழ்வுகளை இராணுவத் தலையீடுகளோ, பொலிஸாரின் அச்சுறுத்தல்களோ அற்று அமைதியான வழியில் கடைப்பிடிப்பதற்கு ...

மேலும்..

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்புதல்: இனவாத கருத்துகளை முன்வைக்கவேண்டாம்! மனுஷநாணயக்கார கூறுகிறார்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்கு இலங்கையர்களை அனுப்பும் விடயத்தில் இனவாதக் கருத்துக்களை முன்வைக்க  வேண்டாம். இன,மத ரீதியில் கட்சிகளின் பெயர்களை வைத்துக்கொண்டு இவ்வாறு செயற்பட வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  அமர்வின் போது இலங்கையிலிருந்து ...

மேலும்..

ரணில் சொல்வார் செய்ய மாட்டார்! மனோ சாட்டை

ஜனாதிபதி பெருந்தோட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கியுள்ள 4 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் ரணில் விக்ரமசிங்க சொல்வார் செய்ய மாட்டார். அத்துடன் இலங்கையை ஆசியாவில் உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்ற பெருந்தோட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒன்றுமே வழங்கியதில்லை ...

மேலும்..

தொழிலுக்காக இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்க வேண்டாம்! ஹக்கீம் கோரிக்கை

இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு  இலங்கையர்களை அனுப்புவதன் மூலம்  அங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டால் அது எமது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளைத் தூண்ட காரணமாக அமையலாம். அத்துடன்  இந்த விடயத்தில் அரசாங்கம் அரபு நாடுகளைக்  கண்டுகொள்ளாது சந்தர்ப்பவாதமாக செயற்படக்கூடாது. அதனால் இலங்கையர்களை தொழிலுக்கும் அனுப்பும் ...

மேலும்..

சந்தேக நபரை துரத்திச்சென்றபோது பலியான பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பதவி உயர்வு!

சந்தேக நபரை துரத்திச் சென்றபோது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பொலிஸ் சார்ஜன்ட்டாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஜா-எல பகுதியில் கைவிலங்குடன் நீரோடையில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்றபோது நீரில் மூழ்கி ...

மேலும்..

நீர்கொழும்புமுதல் யாழ்.வரை சைக்கிளில் முதியவரின் சாதனை பயணிக்கும் முயற்சி!

'சமாதான துவிச்சக்கரவண்டி பயணம்' என்ற தொனிப்பொருளில் 67 வயதுடைய நபர் ஒருவர் சனிக்கிழமை சைக்கிளில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பம்புக்குளிய தேவாலயம் முன்னாலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய 24 மணிநேர சாதனை பயணத்தில் ஈடுபட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இச்சாதனையில் ஈடுபட்டுள்ள ரிச்சர்ட் பெர்னாந்து ...

மேலும்..

மறைத்து வைக்கப்பட்டுள்ள அரிசியை கையகப்படுத்த விரைவில் சட்டமூலம்

அரிசி ஆலை உரிமையாளர்கள் மறைத்து வைத்திருக்கும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளை கையகப்படுத்தி சந்தைக்கு வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி ...

மேலும்..

எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்ற முடியும் – பிரதமர் தினேஷ்

ஜனாதிபதி எந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து சபையில் உரையாற்ற முடியும் என்பது தெளிவாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை யாருக்கும் தடுக்க முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (24) ஜனாதிபதி ஆற்றிய உரையையடுத்து ஆளும் கட்சி ...

மேலும்..

பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள் ; அமைச்சர் பந்துல எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால்

வரிக் குறைப்பு செய்ததால் ஒரே நாளில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. பொருளாதாரம் பாதிக்கப்பட்ட விதம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் ஒப்புவிக்க எனக்கு முடியும். முடிந்தால் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கல் என அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்க்கட்சித் தலைவருக்கு சபையில் சவால் விடுத்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ...

மேலும்..