கல்முனையில் கொட்டும் மழைக்கு மத்தியில் வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!

கொட்டும் மழைக்கு மத்தியில் வீதிஅபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் சமுகமளித்ததனால் நீண்டகால வீதிப்பிரச்சினையொன்று தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.

கல்முனை அம்மன்கோவில் வீதி உடையார் வீதி மற்றும் பீச் வீதியின் வடிகான் மற்றும் கல்வேர்ட் பிரச்சினைக்கு நேற்று ர்வுகாணப்பட்டது.

பிரச்சினையை முன்வைத்த அவ்வட்டாரத்திற்குரிய கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் வீதியின் குடியிருப்பாளர்களுடன் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் ஜ திட்டத்திற்கான பிராந்தியப் பொறியியாளர் வி.பரதன் மற்றும் நிபுணத்துவசேவையின் வதிவிடப்பொறியியாளர் எஸ்.எ.சபீக் ஆகியோர் கலந்துரையாடினர்.

குறித்த வீதிகளின் வடிகான்களை எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் பாதைப்புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கும்போது முதல்வேலையாக செய்வதென்றும் பீச் வீதியில் கல்வேட் ஒன்று போடுவதென்றும் வடிகான் அமைப்பை மேலும்சற்றுதூரம் விஸ்தரிப்பதென்றும் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.


குறித்த வீதிகள் யாவும் உறுப்பினர் ராஜனின் வேண்டுகோளுக்கமைவாக 2018ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தித்திணைக்கள பொறியியாளர் எஸ். கதீசனின் பரிந்துரைக்கமைவாக வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் ஜறோட் திட்டத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.

இருவருடம் தாமதித்து இவ்வருடம் ஆரம்பித்த வீதி புனரமைப்பின்போது உடையார் வீதியில் போடப்பட்ட 25மீற்றர் பீலி வடிகான் பிரச்சினைக்கு இலக்கானது . அதை அகற்றி தமது வீடு வளவுகளை வெள்ளத்தில் தாழாது தடுக்குமாறு கல்முனை உடையார் வீதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். உறுப்பினர் ராஜனும் அதிகாரிகளை வரவழைத்து பிரச்சினையைதீர்க்க நடவடிக்கை எடுத்தார்.


அதற்கமைவாக நேற்று  அதிகாரிகள் விரைந்து உரியதீர்வைப்பெற்றுக்கொடுத்தமையினால்  மக்களின் பிரச்சினை தீர்ந்தது.


குறித்த பீலிவடிகானின் உட்பக்கமாக குடியிருப்பாளர் ஜெயக்குமாரின் மதிலுக்கு வெளியாகஉள்ள பகுதியில் புதிதாக வடிகானை அமைத்துத்தர அதிகாரிகள் இணங்கியதையடுத்து பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்தது. 
 
இவ்வீதிப் பிரச்சினையை தீர்த்துவைக்க உதவிய உறுப்பினர் ராஜனுக்கும் அதிகாரிகளுக்கும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.