மின்வெட்டு நேரம் சடுதியாக அதிகரிப்பு – வெளிவந்த புதிய அட்டவணை

நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 02 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு நேர அட்டவணை

மின்வெட்டு நேரம் சடுதியாக அதிகரிப்பு - வெளிவந்த புதிய அட்டவணை | Power Cut Schedule Ffor 28Th 29Th Slight Increase

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு  நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 20 நிமிடங்கள் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்