இன்றைய நாள் எப்படி – 23 ஏப்ரல் 2024

 23/04/2024 செவ்வாய்க்கிழமை 

1)மேஷம்:-
செல்வநிலை உயரும் செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கை துணையோடு உருவான பிரச்சினைகள் அகலும். உடல் நலம் சீராகும் .

2)ரிஷபம் :-
விரயங்கள் கூடுதலாக தான் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆடை ஆபரண பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம்.

3)மிதுனம்:-
செலவுகேற்ற வரவு உண்டு. சில காரியங்களை அதிக முயற்சிக்குப் பின் முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பாகப்பிரிவினைகள் சமூகமாக முடியும்.

4)கடகம்:-
இடம் பூமியை விற்பனையால் லாபம் உண்டு. எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணம் அறிந்து நடந்து கொள்வர் .

5)சிம்மம்:-
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். இதுவரை தடையாக இருந்த காரியங்கள் இப்பொழுது தானாக நடைபெறும் .

6)கன்னி:-
அடகு வைத்த நகைகளை மீட்டு வந்து அணிந்து அழகு பார்ப்பீர்கள். தொழிலில் தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும்.

7)துலாம்:-
கல்யாண கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் கடமையை செவ்வனே செய்து மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

8)விருச்சிகம்:-
விபரீத ராஜயோக அடிப்படையில் நல்ல சம்பவங்கள் நடைபெறப்போகிறது. திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட படியே நடைபெறும்.

9)தனுசு:-
பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிரபலமானவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்து கொடுப்பர்.

10)மகரம்:-
தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கட்டிட பணி தொடரும்.

11)கும்பம்:-
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். பணியை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

12)மீனம்:-
குடும்பம் சுமை கூடும். உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.