இன்றைய நாள் எப்படி – 26 ஏப்ரல் 2024

26/04/2024 வெள்ளிக்கிழமை 

1)மேஷம்:-
வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பெரிய தொழிலதிபர்களின் உதவியால் வாழ்க்கை தரம் உயரும்.

2)ரிஷபம் :-
தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிக்கு கடன் உதவி கிடைக்கும். பிள்ளைகளாலும் உதவி வருமானம் வரும் .வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

3)மிதுனம்:-
ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். ஒரு சிலர் ஒவ்வாமை நோய்க்கு ஆட்பட நேரிடும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள்.

4)கடகம்:-
சகோதர ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வழக்குகள் சாதகமாக முடியும்.

5)சிம்மம்:-
எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். தேவைக்கு ஏற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் வந்து சேரலாம்.

6)கன்னி:-
வெளிநாடு சென்று பணிபுரிய ஆசைப்பட்டவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும். அடிக்கடி உடல் நல குறைபாடு ஏற்பட்டு உற்சாகத்தை குறைக்கும்.

7)துலாம்:-
தொழில் வளம் சிறப்பாக இருக்கும். நினைத்த தொழிலை தொடங்க வாய்ப்பு உருவாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

8)விருச்சிகம்:-
எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக லாபம் பெறுவீர்கள். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும்.

9)தனுசு:-
பங்குதாரர்களை ஆராய்ந்து அறிந்து சேர்த்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் மிகுந்த கவனம் தேவை.

10)மகரம்:-
உன்னத வாழ்வு அமைய வழி பிறக்கும். பொன் பொருள் சேர்க்கையும் பிள்ளைகளால் யோகமும் உண்டு.

11)கும்பம்:-
குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயமும் கிடைக்காது.

12)மீனம்:-
பொருளாதாரம் திருப்திகரமாக இருந்தாலும் குடும்ப சுமை கூடும். புனித பயணங்கள் அதிகரிக்கும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை முடிவடையாத காரியங்கள் இப்பொழுது முடிவடையும்.