இன்றைய நாள் எப்படி – 28 ஏப்ரல் 2024

28/04/2024 ஞாயிற்றுக்கிழமை 

1)மேஷம்:-
கைநழுவி சென்ற புதிய ஒப்பந்தங்கள் இப்போது முயற்சி செய்யாமலேயே உங்களை வந்தடையும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு.

2)ரிஷபம் :-
தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உருவாகும்.

3)மிதுனம்:-
பொருளாதாரத்தில் இருந்த சரிவு நிலை அகலும். வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

4)கடகம்:-
எண்ணற்ற மாற்றங்கள் வந்து இதயத்தை வாடவைக்கும். மகிழ்ச்சியையும் உருவாக்கும். பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அடிக்கடி சீர்கேடுகள் வரலாம்.

5)சிம்மம்:-
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதன் மூலமும் எதையும் யோசித்து செய்வதன் மூலமும் மன நிம்மதி பெற முடியும்.

6)கன்னி:-
மன பயம் உருவாகலாம். ஆனால் மதிப்பு மரியாதையில் எந்த குறையும் ஏற்படாது. வாழ்க்கை தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும்.

7)துலாம்:-
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தொழில் சென்ற ஆண்டில் கொஞ்சம் மந்த நிலையை அடைந்திருக்கலாம்.

8)விருச்சிகம்:-
கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். நாற்ப்புறமும் இருந்து நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்.

9)தனுசு:-
உடல் நலம் சீராகும். மங்கல காரியங்கள் மனதில் நடைபெறும். இதுவரை ஏற்பட்ட தடைகளும் தாமதங்களும் அகலும்.

10)மகரம்:-
வருமானம் சிறப்பாக இருக்க வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

11)கும்பம்:-
உற்சாகம் கொஞ்சம் குறையாலாம். நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தான் உண்டு தன் வேலை என்று இருக்க வேண்டிய நேரம் இது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

12)மீனம்:-
தொழில் லாபம் பொங்கி வரும். மண்,மனை வாங்கும் யோகமும் மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய நடைபெறும் சூழ்நிலை உருவாகும்.