இன்றைய நாள் எப்படி – 30 ஏப்ரல் 2024

30/04/2024 செவ்வாய்க்கிழமை 

1)மேஷம்:-
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். பணியை விரைந்து முடிக்க ஓய்வின்றி பணியாற்றுவீர்கள்.

2)ரிஷபம் :-
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும் பொறுப்புகளால் வேலைப்பளு அதிகரிக்கலாம்.

3)மிதுனம்:-
சொந்த தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும். பழைய வாடிக்கையாளர்கள் மூலம் புதிய நபர் அறிமுகம் கிடைக்கப்பெறும்.

4)கடகம்:-
அலுவலகத்தில் செல்வாக்கு இருந்தாலும் பொறுப்புகளும் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் புதிய யுத்திகளை கையாண்டு வேலைகளை விரைவாக செய்து முடிப்பீர்கள்.

5)சிம்மம்:-
அலுவலகத்தில் ஒரு சிலருக்கு செல்வாக்கு உயரும். சொந்த தொழில் செய்பவர்கள் வேலைகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

6)கன்னி:-
சொந்தத் தொழில் செய்பவர்கள் பரபரப்பாக வேலைகளில் ஈடுபட்டாலும் வருமானம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது.

7)துலாம்:-
சொந்தத் தொழில் செய்பவர்கள் செய்து கொடுத்த பணியில் உள்ள குறைகளை மீண்டும் சரி செய்து கொடுத்து நேரலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபத்தில் குறை எதுவும் இருக்காது .

8)விருச்சிகம்:-
உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களின் வேலையும் சேர்த்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். அதிக பொறுப்புக்களால் ஓய்வின்றி பணியாற்றுவீர்கள்.

9)தனுசு:-
அலுவலக பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாவிட்டால் பிரச்சனைகள் உருவாகக்கூடும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பழைய வாடிக்கையாளர்கள் மூலம் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கலாம்.

10)மகரம்:-
சொந்த தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் முக்கிய வேலை ஒன்றை விரைவாக செய்து முடிக்க வேண்டிய நிலை ஏற்படும் .கூட்டுத் தொழிலில் வளக்கமான லாபம் குறையாது.

11)கும்பம்:-
உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வின்றி உழைக்க வேண்டியது இருக்கு.

12)மீனம்:-
சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்கள் வேலையை நவீன கருவிகள் உதவியுடன் விரைவாக செய்து கொடுப்பார்கள். கூட்டு தொழில் நன்றாக நடைபெறும்.