இன்றைய நாள் எப்படி – 01 மே 2024

01/05/2024 புதன்கிழமை 

1)மேஷம்:-
செய்யும் வேலைகளில் கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுகளை சரி செய்ய நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள்.

2)ரிஷபம் :-
சொந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். வேலையை முடிக்க வாடிக்கையாளர்களிடமிருந்து நெருக்கடி வரலாம்.

3)மிதுனம்:-
கூட்டுத்தொழில் முயற்சியில் எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லுங்கள். பங்குச்சந்த வியாபாரத்தில் சிறிது முன்னேற்றம் காணக்கூடும்.

4)கடகம்:-
கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் வந்து சேரும். பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள்.

5)சிம்மம்:-
தொழில்நுட்பம் அறிந்தவர்களை உதவியாளர்களாக பணியில் அமர்த்தி கொள்ள திட்டமிடுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பணியாளர்களை அவ்வப்போது கண்காணித்து வருவது நல்லது.

6)கன்னி:-
கூட்டுத் தொழில் சுமாராக நடைபெறும். ஆயினும் வழக்கமான லாபம் குறையாது. பங்குச்சந்து வியாபாரத்தில் லாபம் இல்லாமல் போகலாம்.

7)துலாம்:-
கூட்டாளிகளில் ஒருவர் பிரிந்து சென்று புதிய தொழிலை தனியாக செய்ய முற்படுவர். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். எதிர்பார் த லாபம் கிடைக்கும்.

8)விருச்சிகம்:-
சொந்தத் தொழில் செய்பவர்கள் அவசர காரியங்களை முடிப்பதற்காக அதிக அலைச்சலை சந்திக்க வேண்டியது இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

9)தனுசு:-
கூட்டு தொழில் வியாபாரத்தில் வழக்கமான லாபம் வந்து சேரும். பங்குச்சந்தை வியாபாரத்தில் இஸ்திர தன்மை உள்ள பங்குகளில் கவனம் செலுத்துவது நல்லது.

10)மகரம்:-
பணியாளர்களின் ஒத்துழைப்பால் வியாபார அபிவிருத்தி ஏற்படும். பங்குச்சந்தைகள் அதிக லாபம் பெற சிறிது காலம் பொறுமையாக இருப்பதே நல்லது.

11)கும்பம்:-
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு வங்கிகளில் எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கலாம். பங்குச்சந்தையில் ஸ்திரமான விலை உள்ள பங்குகளை பெற முயற்சிப்பீர்கள்.

12)மீனம்:-
தொழிலை விஸ்தரிப்பது பற்றி கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நன்மை தரும். பங்கு சந்தை வியாபாரம் நன்கு நடைபெறும் .