இன்றைய நாள் எப்படி – 03 மே 2024

03/05/2024 வெள்ளிக்கிழமை 

1)மேஷம்:-
கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் கைகூடி வரும். இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பார்த்தபடி அமையக்கூடும்.

2)ரிஷபம் :-
சகோதர வழியில் உதவிகள் கிடைத்து சந்தோஷம் காண்பீர்கள்.பெற்றோர்களின் உடல் நலத்தில் மட்டும் கவனம் தேவை. உத்தியோகப் பணியில் மீண்டும் சேர வாய்ப்பு உருவாகும்.

3)மிதுனம்:-
திட்டமிட்ட காரியங்கள் சிலர் நடைபெறாமல் போகலாம். பொருளாதாரத்தில் இருந்த சரிவு நிலை அகலக்கூடும்.

4)கடகம்:-
சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அடிக்கடி சீர்கேடுகள் வரலாம்.

5)சிம்மம்:-
எதையும் யோசித்து செய்வதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். குடும்ப உறவில் விரிசல் ஏற்படலாம். தேவைக்கேற்ற பணம் வந்து சேரும்.

6)கன்னி:-
மன பயம் உருவாக்கும். ஆனால் மதிப்பும் மரியாதையிலும் எந்த குறைவும் ஏற்படாது. அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கக்கூடும்.

7)துலாம்:-
பொருளாதார நிலை திருப்தி தரும். சொத்து விற்பனையின் மூலம் கடன் சுமை குறைய வழி பிறக்கும். வெளிநாட்டு முயற்சியில் இருந்த தடை அகலும்.

8)விருச்சிகம்:-
சேமிப்பு உயரும். செய்யும் செயல்கள் யாவும் வையகத்தார் போற்றுமளவு அமையும் .பாதியில் நின்ற பல பணிகள் மீதும் தொடரும்.

9)தனுசு:-
உடல்நலம் சீராகும். அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது. மனையில் மங்கல காரியங்கள் நடைபெறும். தடை தாமதங்கள் ஆகலும்.

10)மகரம்:-
உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். ஒரு சிலருக்கு ஊர் மாற்றம் இடமாற்றம் உறுதியாகலாம்.உத்தியோகத்தில் பணியாளர் மாற்றங்களால் நிம்மதி கிடைக்கும்.

11)கும்பம்:-
அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமும் அமைதி காண இயலும். நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உடல் நலத்தில் அதிக தொல்லைகள் ஏற்படலாம்.

12)மீனம்:-
தொழிலில் லாபம் பொங்கி வரும். கடுமையாக முயற்சித்து முடிவடையாத காரியங்கள் இப்போது நடைபெறும்.