இன்றைய நாள் எப்படி – 05 மே 2024

05/05/2024 ஞாயிற்றுக்கிழமை 

1)மேஷம்:-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகிவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும்.

2)ரிஷபம் :-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. பிள்ளைகளின் சுபகாரியங்கள் நடைபெறும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வழி பிறக்கும்.

3)மிதுனம்:-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. நீங்கள் எந்த துறையில் ஈடுபட்டிருந்தாலும் அதில் மாற்றம் உண்டு. வரும் மாற்றம் நல்ல மாற்றமாகவே அமையும்.

4)கடகம்:-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

5)சிம்மம்:-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. பல நல்ல மாற்றங்கள் வந்து சேரும். வளர்ச்சி கூடும். வருமானம் திருத்தி தரும். தொழிலில் இருந்த குறுக்கீடு அகலும்.

6)கன்னி:-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. இது வரை நிலவிய குழப்பங்கள் ஆகலும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கைகூடும்.

7)துலாம்:-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. தனவரவு திருப்தி தரும். தடைகள் அகலும். விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் விரையங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்க முன் வருவீர்கள்.

8)விருச்சிகம்:-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. வருங்காலம் சிறப்பாக அமையும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்வில் வசந்தம் வரும். வருமானம் திருப்தியாக இருக்கும்.

9)தனுசு:-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. முடிந்தவரை மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

10)மகரம்:-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்காதீர்கள்.

11)கும்பம்:-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. தயக்கம், தடுமாற்றங்கள் இனி நீங்கும். உங்களுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகும். இடமாற்றமும் இருக்கும்.

12)மீனம்:-
பிரதோஷ விரதம். மாலை நேரத்தில் சிவன் நந்தி வழிபாடு செய்க. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பணவரவு தொடரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.