இன்றைய நாள் எப்படி – 07 மே 2024

07/05/2024 செவ்வாய்க்கிழமை 

1)மேஷம்:-
சுப செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

2)ரிஷபம் :-
கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பெற்றோர் உடல் நலனில் கவனம் தேவை. வாரிசுகளின் வளர்ச்சி மகிழ்ச்சி தரும்.

3)மிதுனம்:-
குடும்ப ஒற்றுமை பலப்படும். தொழில் முன்னேற்றம் உண்டு. கடன் சுமை குறையும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

4)கடகம்:-
பெண்களுக்கு குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும்.

5)சிம்மம்:-
பெண்களுக்கு மனக்கலக்கம் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் பிரச்சினை வரலாம். ஆதாயம் குறைவாகவும் அலைச்சல் கூடுதலாகவும் இருக்கும்.

6)கன்னி:-
பெண்களுக்கு அதிக விரயம் உண்டு. நிம்மதி குறையும். தொழிலைப் பொறுத்தவரை யாரை நம்பியும் எதுவும் செய்ய இயலாது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

7)துலாம்:-
குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

8)விருச்சிகம்:-
உங்களின் திறமைக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

9)தனுசு:-
யாரேனும் உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. தவறு செய்யாமலேயே நீங்கள் தவறு செய்தாக சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.

10)மகரம்:-
தந்தையாருக்கு சின்ன அறுவை சிகிச்சை, மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்துப் போகும்.எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும்.

11)கும்பம்:-
விட்டுக் கொடுத்து போவது நல்லது. அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். மனத்தாபங்களும் வந்து நீங்கும்.

12)மீனம்:-
கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் தனிக் குடித்தனம் செல்வீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும்.