பெண்கள் கர்ப்பக்காலத்தில் ஏன் முடி உதிர்வு பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்?

பெண்கள் கர்ப்பக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் முடி உதிர்தலும் அடங்கும். பிரசவத்துக்கு பிறகும் இது தற்காலிகமானது என்றாலும் கூட அலட்சியம் செய்தால் அவை நிரந்தரமாக மாறவும்..

 
கர்ப்பக்காலத்தில் முடி உதிர்வு

ஹைலைட்ஸ்:

  • ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் கூந்தலில் அதிகப்படியான வளர்ச்சியை உணர்கிறார்கள்.
  • சத்து குறைந்திருக்கும் பெண்கள் கர்ப்பக்காலத்தில் மேலும் சத்துகுறைபாட்டை அடைகிறார்கள். இதனால்

கர்ப்பிணிகள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளோடு அழகு சார்ந்த பிரச்சனைகளையும் சந்திக்கும் காலம் உண்டு. கர்ப்பக்காலத்தில் மெலனினை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பு அதிகரிப்பதால் சருமங்களில் மாற்றங்கள் உண்டாகும். ஆனால் கர்ப்பக்காலத்தில் சில பெண்கள் அதீத அழகுடன் இருப்பதும் உண்டு. இதற்கு காரணமும் உண்டு.

ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் கருவுற்ற காலங்களில் சத்துமிக்க உணவுகளையும் சேர்த்து எடுத்துகொள்ளும் போது உடலில் ஹார்மோன் சுரப்பு ஆரோக்கியமாக இருக்கும். உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். இதனால் சருமம் மிளிரக்கூடும். அதனால் தான் பெண்களின் முகத்தில் தனி களையே தெரிகிறது என்பார்கள். ஆனால் இத்தகைய பெண்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

பெண்கள் இயல்பாகவே சத்து குறைபாடை கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கர்ப்பகாலத்தில் மேலும் சத்து குறைபாட்டுக்கு உள்ளாவதும் அதிகரித்துவருகிறது. ஒருபுறம் ஆரோக்கிய குறைபாடும் மறுபுறம் அழகு சார்ந்த குறைபாடும் உண்டாகிறது. முகத்தில் உண்டாகும் கொழுப்பு கட்டிகள், பருக்கள்வரக்கூடும். இவை கர்ப்பக்காலத்தில் உண்டாகும் தற்காலிக குறைபாடு போன்று பிரசவக்காலத்துக்கு பிறகு சரியாகிவிடும்.

பெண்கள் அழகு குறித்த விஷயங்களில் எப்போதும் ஆர்வம் உடையவர்கள். எனினும் கர்ப்பக்காலத்தில் அழகு பொருள்களை பயன்படுத்துவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தை உண்டாக்க வாய்ப்புண்டு. குறிப்பாக கெமிக்கல் கலந்த பொருள்களை பயன்படுத்தகூடாது என்று அறிவுறுத்துவதும் இதனால் தான்.

samayam tamil

பிரசவத்துக்கு பின்பும்

சரும பிரச்சனைகளை தாண்டி இவர்கள் சந்திக்கும் பிரச்சனை கூந்தல் உதிர்வு. ஆரோக்கியமான பெண்கள் தங்கள் முதல் ட்ரைமெஸ்டரிலும் அடுத்த இரண்டாவது ட்ரைமெஸ்டரிலும் அதாவது 2 முதல் 7 மாதங்கள் வரையும் கூட கூந்தல் வளர்ச்சியை அதிகமாக உணர்வார்கள். இன்னும் சில பெண்கள் பிரசவத்தின் இறுதி மாதங்களில் கூந்தலில் அடர்த்தியை உணர்வார்கள். கூந்தலின் அடர்த்தியும், வளர்ச்சியும் கூட அதிகரிக்கும். சில பெண்கள் கூந்தல் வளர்ச்சியில் எந்தவிதமான வேறுபாடும் இன்றி அப்படியே இருப்பார்கள்.

கர்ப்பக்காலத்தில் ஹார்மோன் சுரப்புகளில் உண்டாகும் மாற்றம் கூந்தல் வளர்ச்சியிலும் பிரதிபலிக்கிறது. கர்ப்பக்காலத்தின் முதலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகரிக்கும். ஆண்ட்ரோஜன் சுரப்பு இவை ஆண்களுக்கு தான் அதிகம் சுரக்கும் என்றாலும் பெண்களுக்கும் சிறிதளவு சுரக்கும் இவை மேலும் குறையும். இதனால் கூந்தலில் அடர்த்தியை உணரலாம்.

ஆனால் அநேக பெண்கள் கர்ப்பக்காலத்தில் கூந்தலின் வளர்ச்சியையும் அடர்த்தியையும் இழக்கவே செய்கிறார்கள். கூந்தலின் வளர்ச்சியும் பாதிப்பும் ஒவ்வொரு பெண்ணின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து மாறுபடுகிறது. உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறைக்கு உள்ளாகும் போது கூந்தல் முதலில் வறட்சியை சந்திக்கிறது. பிறகு கூந்தல் நுனி பிளவு முடி வெடிப்பு உண்டாகி முடி உதிர்வு அதிகமாகிறது. இவை பிரசவக்காலத்துக்கு பிறகு மேலும் அதிகபடியான கூந்தல் இழப்பை ஊக்குவிக்கிறது.

பிரசவத்துக்கு பிறகு பெண்களின் உடலானது மீண்டும் இயல்பு நிலைக்கு தொடங்கும். கர்ப்பப்பை சுருங்குவது முதல் உறுப்புகள் வரை இயல்பு நிலைக்கு திரும்பும் போது ஹார்மோன் சுரப்பில் மீண்டும் மாற்றங்கள் உண்டாகும். அப்போது ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பும் குறைய தொடங்கும். இப்போது முடி உதிர்வு ஆரோக்கியமான பெண்களுக்கும் வரத்தொடங்கும்.

தலையில் கை வைத்தாலே கையோடு முடி வந்துவிடும். சீப்பு கொண்டு சீவும் போதும் கொத்து கொத்தாக முடி கைகளில் பரவும். ஆனால் இவையெல்லாம் தற்காலிகமானவை. உரிய பராமரிப்பு செய்தாலும் கூட இந்த உதிர்வு பிரச்சனை இருக்கதான் செய்யும். ஆனால் இவை ஹார்மோன் கட்டுபாட்டுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். ஆனால் கூந்தல் பராமரிப்பில் நீங்கள் அலட்சியம் செய்தால் முடி உதிர்வு பிரச்சனை நிரந்தரமாகிவிடக்கூடும்.

பல பெண்களின் குழந்தை பிறப்புக்கு பிறகு குழந்தையை காரணம் காட்டி தங்களை பராமரிக்க தவறிவிடுகிறார்கள். அப்போது உடல் ஆரோக்கியத்தோடு கூந்தலின் ஆரோக்கியமும் கூட குறையக்கூடும்.கூந்தலுக்கு அழகு சாதன பொருள் வேண்டாம். ஆனால் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

கர்ப்பமாக இருக்கும் போதே கூந்தலையும் பராமரிக்க தொடங்குங்கள். உணவில் அக்கறை செலுத்துங்கள். காலையும் மாலையும் கூந்தலை சீவி சிக்கலில்லாமல் பின்னலிட்டு கொள்ளுங்கள். கூந்தலுக்கு மாதம் ஒரு முறை ஆயில் மசாஜ் செய்யலாம். ஆயில் மசாஜ் போன்று முடியின் ஸ்கால்ப் பகுதியில் விரல்களால் அழுத்தம் கொடுத்து மிதமாக மசாஜ் செய்யலாம். இவை கூந்தலுக்கும் மனதுக்கும் சேர்த்து ரிலாக்ஸ் கொடுக்கும்.

மாதம் ஒருமுறை எண்ணெய் குளியலை பின்பற்றுங்கள். எண்ணெய் குளியல் உடலுக்கு குளிர்ச்சிதரும் என்று நினைப்பவர்கள் எண்ணெயைக் காய்ச்சி தலைக்கு தடவலாம். இதனால் குளிர்ச்சி உண்டாகாது. இரவில் ஆழ்ந்த உறக்கமும் உண்டாகும். பிரசவத்துக்கு பிறகும் கூந்தலை சிக்கில்லாமல் அவ்வபோது கைவிரல்களால் மசாஜ் செய்து வந்தாலே கூந்தல் பிரச்சனை உங்களை வாட்டி வதைக்காது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.