காதலிக்கணும்னா இந்த 15 தகுதியும் வேணுமாம்… உங்களுக்கு இருக்கானு செக் பண்ணிக்கோங்க…

காதல் என்பது சாதாரண விஷயம் கிடையாது. வாழ்க்கையின் மிக அடிப்படையான ஆதாரம் அதுதான். அந்த காதலை எந்த பிரச்சினையும் இல்லாமல் கொண்டு போக வேண்டுமானால் இந்த 15 விஷயங்களையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சொல்லப் போனால் சிற்நத காதலருக்கான 15 தகுதிகள் என்று கூட சொல்லலாம்.

​காதலிக்க தகுதி வேண்டுமா?

samayam tamil

நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தாலும் சரி. இல்லையென்றாலும் சரி. நீங்கள் உங்கள் காதலை வாழ்க்கை முழுவதும் கொண்டு போக வேண்டும் என்று நினைத்தாலும் சரி. இல்லையென்றாலும் சரி. நீங்கள் காதலிக்க தொடங்கி விட்டால் உங்களுக்கு முக்கியமான சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

சில அனுபவமுள்ளவர்கள் தாங்களாகவே காதலில் ஏற்படும் பிரச்சனைகளை அனுபவித்து அதன் மூலம் பல வழிகளை கண்டுபிடித்து வைத்திருப்பார்கள். ஆனால் புதிதாக காதலிக்க ஆரம்பித்த ஒருவருக்கு இது போன்ற அனுபவங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. அனைத்து பிரச்சனைகளையும் கையாண்டு, காதலில் அனுபவம் உள்ளவர்கள் தரும் பலவிதமான யோசனைகள். இந்த கீழ்க்கண்ட யோசனைகளை பயன்படுத்தி வந்தால், நம் காதலை கடைசிவரை யாராலும் பிரிக்க முடியாது. உங்கள் காதலி அல்லது காதலனுக்கு உங்கள் மேல் அன்பு இன்னும் பல மடங்காக அதிகரித்துவிடும்.

​அமைதி காண வேண்டும்

samayam tamil

ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் இரண்டு பேரில் யார் வாதாடி ஜெயிக்க வேண்டும் என்று சண்டையிட்டு முந்திக் கொண்டு செல்வதை தயவுசெய்து தவிர்க்க வேண்டும். நீங்கள் காதலிப்வர்களிடம் சில நேரங்களில் தோற்று தான் ஆக வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் இதயத்தில் நீங்கள் ஜெயிக்க முடியும். அமைதியே பல பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ஆக விளங்குகிறது.

சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்து இருந்தாலும் அதை பொறுமையாகவும் சாந்தமாகவும் கையாளுவது மிகவும் அவசியமான ஒன்று. உங்கள் பொறுமைக்கும் சாந்தத்திற்கும் கிடைக்கக் கூடிய அன்பு விலைமதிப்பற்ற தாக இருக்கும். எடுத்துக் கூற வேண்டியதை அன்புடனும் பண்புடனும் எடுத்துக்கூற வேண்டும். உங்கள் மனதில் இருக்கும் விஷயத்தை சற்று ஆறப்போட்டு தெளிவாகக் கூற வேண்டும். அந்த இடத்திலேயே அதை பெரிய பிரச்சனையாக கூடாது.

​உங்களால் அவர்களை மாற்ற முடியும்

samayam tamil

நம் கைகளிலேயே இருக்கக்கூடிய அனைத்து விரல்களும் ஒன்றுபோல இருப்பதில்லை. உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குணங்களை கொண்டு இருப்பார்கள். உங்களைப் போன்றே அனைவரும் இருக்கவேண்டும் என்று நினைப்பது, உங்களுக்கு அவர் சரிப்பட்டு வரவில்லை என்று உடனே விலகி வந்துவிடக்கூடாது.

முடிந்த அளவு உங்களுக்கு ஏற்றவாறு அவர்களை மெல்ல மெல்ல மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்படி மாற்ற முடியவில்லை என்றால் அவர்கள் எப்படியோ அதையே ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். ஒவ்வொரு மனிதரையும் தனித்தனியாக புரிந்துகொள்ளவேண்டும் அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

​தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்:

samayam tamil

காதல் வாழ்க்கையில் சமநிலை என்பது மிகவும் முக்கியமான விஷயம் ஒரு சில சமயம் நீங்கள் ஜெயித்துருப்பீர்கள் சில சமயம் நீங்கள் தோற்று இருப்பீர்கள். நீங்கள் அனைத்து விஷயங்களிலும் ஜெயிக்க வேண்டும் என்பது தவறான எண்ணம்.விட்டுக் கொடுத்து பழக வேண்டும். பேச அவர்களுக்கும் சற்று வாய்ப்புகளை அளிக்க வேண்டும். அவர்கள் மேல் அனைத்து உரிமைகளையும் நீங்கள் மட்டும்தான் எடுக்க வேண்டும் என்று நினைத்தல் கூடாது. உங்கள் மீதும் அவரை உரிமை எடுத்துக்கொள்ள சிறிது வாய்ப்பு கொடுக்க வேண்டும். சிறிது நேரம் உங்கள் மீது தப்பு இருந்தால் அதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

​அவர்கள் போனை பார்ப்பதை தவிர்க்கவும்:

samayam tamil

உங்கள் துணை, உங்களது காதலன், காதலியாக இருந்தாலும் அவர்களது அனுமதி இல்லாமல் அவர்களின் போனை பார்ப்பது நல்ல ஒழுக்கமான காரியமாக இருக்காது.அவர்கள் எந்த தவறும் செய்யாமல் இருக்கும் போது அடிக்கடி நீங்கள் அவரது போனை எடுத்து பார்க்கும் பொழுது உங்கள் மீது உள்ள அன்பு அவருக்கு படிப்படியாக குறையும். உங்களது பெருந்தன்மையே உங்கள் மீது அவருக்கு இருக்கும் அன்பை அதிகரிக்கும்.சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவர்களது போனை புடுங்கி பார்ப்பது, அவர்களை சந்தேகப்படுவது போன்ற காரியங்களில் அறவே ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இது நல்ல உறவுக்கான அடித்தளமாக அமயாது.

​தகுதியை பார்க்கக் கூடாது

samayam tamil

என்றுமே ஒருவரின் தகுதியை தராதரத்தை பார்த்து அவர்களை காதலிப்பது என்பது நல்ல காதலாக இருக்காது. அழகு, பணக்காரராக இருக்க வேண்டும், உங்கள் அளவு படித்திருக்க வேண்டும், உங்கள் அளவு அழகு இருக்க வேண்டுமென்று காதலிப்பது பெரும்பாலும் நல்ல காதலாக இருக்காது. சிலர் காதலிக்கும் முன்பு இதையெல்லாம் பார்க்காமல் காதலிக்க ஆரம்பித்தவுடன் அவர்களின் தகுதி, படிப்பு, அழகு, இதெல்லாம் வைத்து அவர்களை மட்டம் தட்டி பேசுவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றார்கள்.

அது மிகவும் அதிகமான மன வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.சிலர் நகைச்சுவைக்காக தான் பேசுகிறேன், என்று அவரின் தகுதி தராதரத்தை மட்டமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது உங்கள் துணையின் மனதில் பெரும் காயமாக இருந்துவிடும். உங்களை மனதளவில் கொஞ்சம் கொஞ்சமாக வெறுத்து உங்களை விட்டு செல்ல வாய்ப்புகள் அதிகமாக கிடைத்துவிடும்.

​நீ தான் எனக்கு எல்லாம் என்று கூறுவதை நிறுத்துங்கள்:

samayam tamil

நீதான் எனக்கு எல்லாம் என்று கூறுவதை தயவுசெய்து நிறுத்த வேண்டும். இந்த உலகத்தில் ஒருவர் மட்டுமே அவர்களுக்கு எல்லாமுமாக இருந்த வரமுடியாது. அவர்களின் குடும்பம், நண்பர்கள், என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருத்தர் ஒருவருக்கு தேவையாகவே இருக்கின்றனர். உங்கள் காதலை மட்டுமே உங்களுக்கு எல்லாமாக இருந்து விட முடியாது. அப்படி நீங்கள் சொல்லி பழகி விட்டீர்கள் என்றால்m அவர்களை தவிர யாரிடமாவது நீங்கள் சிறிதளவு அன்பு செலுத்தினாலே அவர்களின் கோபம் உச்சத்திற்கு ஏறும், எனக்கு எல்லாமே நீதான் என்று சொல்லிவிட்டு உன் வாழ்க்கையில் அவர்களுக்கு ஏன் இடம் கொடுக்கிறாய் என்று அவர்கள் மனம் அவர்களையே அறியாமல் சங்கடப்படும்.

உங்கள் காதலும் உங்களுக்கு முக்கியம், தான் அதேபோல உங்களது குடும்பம், அம்மா அப்பா போன்றவர்களும் உங்களுக்கு முக்கியம் தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தேவையில்லாத உறுதிமொழிகளை உங்கள் காதலரிடம் அல்லது காதலியிடம் கூறுவதை தவிர்க்க வேண்டும். உங்களால் உண்மையிலேயே செய்யக்கூடிய உறுதிமொழிகளை என்றைக்குமே உங்கள் துணைக்கு கூறவேண்டும். கடைசிவரை கடைபிடிக்க முடியாத ஒரு நிலையை கூறிவிட்டு பின்னர் வருத்தப்படும் நிலையை உருவாக்கக் கூடாது.

அவர்களை பாராட்ட வேண்டும்

samayam tamil

ஏதாவது நல்ல விஷயம் அவர்கள் செய்தால் அவரை மனதார பாராட்ட வேண்டும். அனைவருக்கும் தெரியும்படி பாராட்ட வேண்டும். உங்களின் பாராட்டுக்கு அவர்கள் ஏங்கி இருப்பார்கள். சிறு சிறு விஷயங்களையும் ஊக்கப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் காதலி அல்லது காதலன் ஏதேனும் நல்ல காரியங்கள் செய்தால், அவரை ஊக்குவித்து பாராட்டுவது முதல் ஆளாக நீங்கள்தான் இருக்கவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களையும் நீங்கள் கவனிக்கவேண்டும். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்து அவர்களின் மேல் உங்கள் அன்பை காட்ட வேண்டும். நிச்சயமாக நீங்கள் அவர்களை ஒவ்வொரு விஷயத்திற்கும் ஊக்குவித்து பாராட்டி கொண்டிருந்தால் அது திரும்ப உங்களுக்கு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒருவேளை நீங்கள் அவர்கள் என்ன நல்ல விஷயம் செய்தாலும் அவர்களை பாராட்டாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு நீங்கள் இருந்திருந்தால் அவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். நாம் என்ன செய்தாலும் நம்மை கண்டு கொள்ளவே மாட்டார் என்கிற எண்ணம் அவர்களுக்கு உள்ளே வரும். அந்த எண்ணம் சிறிது சிறிதாக உங்களின் மேல் வெறுப்பை உண்டாக்கும். அதேநேரம் அவர்களின் சிறிய சிறிய விஷயங்களை வேறு யாராவது பாராட்டினால் அவர்களின் உள்ளம் அவர்களின் மீது அன்பை செலுத்தும். இது ஒரு இயல்பான காரியம். இது மனது சம்பந்தப்பட்டது. எனவே அவர்கள் நல்ல காரியம் எதுவும் செய்தால் நமக்கு அது பிடித்திருந்தால் மனதார பாராட்ட வேண்டியது நமது கடமை.

​தேவைகளை அறியுங்கள்

samayam tamil

உங்கள் துணைக்கு உங்களை பற்றியே அனைத்து நேரமும் கூறிக் கொண்டே இருப்பதை தவிர்த்திடுங்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் புரிந்துகொண்டு அதை பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். உங்களுக்கு என்ன தேவை, உங்களுக்கு அவர்களிடமிருந்து என்ன தேவை என்பதை கூறிக்கொண்டு உங்களுக்கு தேவையானவற்றை மட்டுமே முடித்துவிட்டு சென்றுவிடக்கூடாது.

முக்கியமாக நம் துணைக்கு என்ன தேவையோ அதை அறிந்து அவர்கள் கூறாவிட்டாலும் நீங்களாகவே அதை அறிந்து கொண்டு அவர்களுக்கு தேவையானவற்றை செய்து முடிக்கக் கூடிய முதல் ஆளாக நீங்கள்தான் இருக்கவேண்டும். இதுபோல் அவர்கள் தேவையை நீங்கள் பூர்த்தி செய்யும்பொழுது தானாகவே உங்களது தேவையையும் அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய மன நிலைக்கு வருவார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் தேதியை நீங்கள் பூர்த்தி செய்யும் பொழுது உங்கள் மீது உள்ள அன்பு பலமடங்கு பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

​உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்

samayam tamil

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் நீங்கள் இருக்கும் அதே மனநிலையில் எப்பொழுதும் அவரும் இருப்பார் என்று அறிந்துகொண்டு அவர்களை தவறாக புரிந்து விடக்கூடாது. நீங்கள் ஒருவேளை சந்தோஷமான மனநிலை இருந்து, அவர் சோகமாகவும் கோபமாக ஒரு மனநிலையில் இருந்து இருந்தால், உடனே கோபப்படுகிறாய், நீ என்னிடம் சரியாக பேச மாட்டுகிறாய் என்று அவருடன் சண்டை போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அவர்கள் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டு அறிந்து அவர்களின் பிரச்சினைக்கு ஒரு ஆறுதலாக நீங்கள் இருக்க வேண்டும். அப்பொழுது அவர்களின் மனநிலை மாறி அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்று எண்ணம் அவர்களுக்குள் வரும் பொழுது உங்கள் மேல் உள்ள அன்பு அவருக்கு பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.