பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி பசங்கள மட்டும் பிடிக்கவே பிடிக்காதாம்…

பெண்கள் பொதுவாக தனக்கு நண்பனாகவோ வாழ்க்கைத் துணையாகவோ வருகிற ஆண்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என பலவித எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் சில குறப்பிட்ட குணங்களைக் கொண்ட ஆண்களை எப்போதுமே பெண்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படி எந்த மாதிரியான ஆண்களைப் பெண்களுக்குப் பிடிக்காது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். அதற்காக காரணங்கள் என்னென்ன என்று இந்த பகுதியில் விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

​பெண்களின் வெறுப்புக்கு உரியவர்கள்

samayam tamil

பொதுவாக உலகம் முழுவதும் எல்லா ஜீவ ராசிகளுக்கும் எதிரெதிர் பாலினங்கள் மீது ஈர்ப்பு இருக்கும். அதுதான் உலக இயக்கத்தையும் தீர்மானிக்கும். அதில் மனிதப் பிறவியில் மட்டும் தான் ஆண், பெண் இருபாலருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை, ஈர்ப்பு, பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என அக மற்றும் புறக் காரணிக்ள கொண்டு காதலும் விருப்பமும் தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு அவர்கள் மட்டும் பொறுப்பாக முடியாது. இந்த சமூகமும் இதற்கான முக்கியக் காரணியாக இருக்கும்.

ஆண்களுக்கு மிக எளிதாகப் பெண்கள் மீது ஈர்ப்பு வந்துவிடும். ஏனென்றால் ஆண்களுக்குப் பொதுவாகவே எதிர்பார்ப்புகள் குறைவு. எளிதாக எந்த விஷயத்தையும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் பெண்கள் அப்படியில்லை. பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஏராளம். எந்த விஷயத்திலும் அவ்வளவு எளிதாகத் திருப்தியடை மாட்டார்கள். அதனாலேயே பெண்கள் மனதில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதாக விஷயம் அல்ல. சரி. அப்போ எந்த மாதிரியெல்லாம் இருக்கும் ஆண்களைப் பெண்களுக்குப் பிடிக்காது என்று தெரிந்து கொண்டால், மிக எளிதாக அவர்களின் மனதைக் கவர்ந்து விடலாம்.

​தகாத வார்த்தை பேசும் ஆண்கள்

samayam tamil

பெண்களைப் பொறுத்தவரையில் ஆண்கள் பேசுகின்ற பொழுது, கனிவும் நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் முக்கியம். ஆனால் சில ஆண்களோ எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவார்கள். வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தையாகப் பேசுவார்கள். விவாதங்களின் போது, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுவார்கள். அதுபோன்ற ஆண்களைப் பெண்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஆண்கள் பெண்கள் படுக்கையறையில் தன்னுடைய ஆடவன் கெட்ட வார்த்தை பேசுவதை ரசிப்பார்கள் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் பெரும்பாலான பெண்கள் அதை விரும்புவதில்லை. தன்னுடைய ஆடவன் மற்றவர்களை விட பரிசுத்தமானவனாக இருக்க வேண்டும் என்றே எல்லா பெண்களும் விரும்புகிறார்கள்

​பல பெண்களுடன் பழக்கம்

samayam tamil

ஆண்களில் பலருக்கும் தன்னை பெரிய ஹீரோவாக நினைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. அதில் தவறில்லை. ஆனால் அதையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, பல பெண்களுடன் ஜாலியாகச் சுற்றுவது, தன்னுடைய காதல் வலையில் வீழ்த்துவது, போனில் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் கடலை போடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடும் போது நிறைய பெண்களுக்கு எரிச்சல் ஏற்படும். அதிலும் தன்னுடைய கணவரோ கணவராக ஆகப் போகிற ஆணோ இப்படி செய்தால், ஒருபோதும் அந்த ஆண்களைப் பெண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதுபோன்ற ஆண்களை ஒருபோதும் பெண்கள் விரும்புவதும் ஆதரிப்பதும் கிடையாது.

​குடிப்பக்கம்

samayam tamil

நிறைய பெண்களுக்கு குடிப்பழக்கம் உள்ள ஆண்களைப் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதில் எந்தவித உண்மையும் கிடையாது. எவ்வளவு மார்டனான பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆண் குடித்துவிட்டு தன்னுடைய அருகில் நெருங்குவதை எந்த பெண்ணும் விரும்புவதில்லை. அதே போல், தன்னுடைய கணவனோ காதலனோ குடித்து, தன்னுடைய ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வதையும் பெண்கள் விரும்ப மாட்டார்கள். அதனால் குடித்துவிட்டு உங்கள் மனைவியையோ காதலியையோ நெருங்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். முடிந்தவரையில் மதுப்பழக்கத்தை கைவிடவோ குறைத்துக் கொள்ளவோ முயற்சி செய்யுங்கள். எப்போதாவது பார்ட்டி, நண்பர்களுடன் சேர்ந்திருத்தல் போன்ற சமயங்களில் ஆண்கள் நண்பர்களுடன் குடிக்க விரும்புவதுண்டு. அது போன்ற விஷயங்களுக்குப் பெண்கள் பெரிதாகக் கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை என்றே சொல்லலாம்.

​தனிமையாகவே இருக்கும் ஆண்கள்

samayam tamil

தனக்கான ஆண் தன்னுடன் மனம் திறந்து பேச வேண்டும் என்று தான் எல்லா பெண்களும் விரும்பாவார்கள். அதனால் கலகலவென பேசும் ஆண்களையும் எதையும் வெளிப்படையாகப் பேசித் தீர்க்கும் ஆண்களையும் தான் பெண்களுக்குப் பிடிக்கும். சில ஆண்கள் எப்போதும் தனிமையில் இருக்கவே விரும்புவார்கள். யாருடனும் அதிகமாகப் பேசிக் கொள்ள மாட்டார். அப்படி இருப்பவர்கள் மிகவும் சுவாரஸ்யம் குறைந்தவர்களாக இருப்பதாக பெண்கள் நினைக்கிறார்கள். அதேபோல சில ஆண்களை எப்போதும் எதையும் வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். எப்போதும் தனியாகவே இருக்க விரும்புவார்கள். அதுபோன்ற ஆண்களைப் பெண்கள் ஒருபோதும் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை. அதுபோன்ற ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் எரிச்சலடைவார்கள். அவர்களுடன் நேரம் ஒதுக்கிப் பேச விரும்புவதில்லை.

​சைகோ குணம் கொண்டவர்கள்

samayam tamil

சைகோகளுக்கு முதலில் பெண்கள் நோ மட்டும் தான் சொல்வார்கள். மற்ற குணங்கள் இருந்தாலாவது ஏதாவது யோசிக்க வாய்ப்புண்டு. ஆனால் சைகோத்தனமாக இருப்பவர்களாக இருந்தால், எந்தவித யோசனைக்கும் இடமே கிடையாது. நாம் நம் நண்பர்களுக்கிடையே மூடியாக இருக்கும் சிலரைப் பார்த்து, டேய் சைகோ என்று வேடிக்கையாகக் கூப்பிடுவதுண்டு. அதுபோன்று தன்னுடைய நண்பர் கூட்டத்தில் யாராவது இருந்தாலே அந்த நபரிடம் இருந்து தள்ளி இருக்க நினைப்பார்கள். பிறகு எப்படி தனக்கான ஆணாக, தன்னுடைய பார்ட்னராகத் தேர்ந்தெடுக்கும் ஆண் சைகோ குணமுள்ளவராக இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக மாட்டார்கள். அதனால் உங்கள் சைகோ குணங்களை நீங்கள் உதறித் தள்ளவில்லை என்றால் ஒருபோதும் ஒரு பெண்ணும் உங்களைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்.

​தன்னலம் கொண்டவர்கள்

samayam tamil

பொதுவாக பெண்கள் என்றாலே தன்னலம் மிக்கவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் பொதுவாக நிலவுகிறது. ஆனால் உண்மை அதில்லை. இயல்பாகவே பெண்களுக்கு இரக்க குணமும் தாராள மனமும் அதிகம். பொதுநலன்களில் விருப்பமுடையவர்கள் தான். என்ன அவர்களுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் சில தடைகள் அவர்களை வெளிக்காட்ட மறுக்கிறது. ஆனால் ஆண்களைப் பொருத்தவரையில், சுயநலம் அதிகமாகக் கொண்ட ஆண்களைப் பெண்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. பெரும்பாலான நேரங்களில் பொது விஷயங்களையும் மற்றவர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு, பொது நலன் சார்ந்த சமூகக் காரியங்களில் ஈடுபடுகின்ற ஆண்களையே பெண்கள் அதிகமாக விரும்புவதாக சில ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

​சந்தேகப்படுகிறவர்கள்

samayam tamil

எத்தகைய ஆண்களை வேண்டுமானாலும் பெண்கள் ஏற்றுக் கொள்ளவோ அவர்களுடன் சேர்ந்து வாழவோ துணிந்திருப்பார்கள். ஆனால் தன்னை சந்தேககப்படுகிற ஆணை ஒரு போதும் அவர்கள் விரும்புவதே கிடையாது. அதேபோல், சந்தேக குணம் உள்ள ஆண்களுடன், அவர் சந்தேகப்படுகிறார் என்று தெரிந்து விட்டால் அதன்பிறகு ஒரு நொடி கூட அந்த ஆணுடன் சேர்ந்து இருக்க விரும்ப மாட்டாள். இயல்பாகவே பெண்களுக்கு யாரேனும் தன்னைச் சந்தேகப்படுவது பிடிக்காது. அதிலும் தன்னுடைய காதலரோ அல்லது வாழ்க்கைத் துணையோ சந்தேகப்படுவதை எப்படி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும்? அதனால் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தேகப்படும் ஆளாக நீங்கள் இருந்தால் அந்த பழக்கத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்குமு் அதிகம் விரும்பும் பெண்ணைக் கூடு உங்களால் இழக்க நேரிடலாம்.

​எப்போதும் வேலையில் மூழ்குவது

samayam tamil

உத்தியோகம புருஷ லட்சணம் என்பதெல்லாம் சரி தான். ஆனால் வேலை முடித்து வந்தோமா மனைவியையும் வீட்டையும் கவனிக்க வேண்டும். அவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் பெண்கள் தான் அதிகம். நன்கு வேலை செய்தால் தான் சிறப்பாக நமக்குப் பிடித்தது போல் வாழ்க்கை நடத்த முடியும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் அதற்காக 24 மணி நேரமும் வேலை வேலை என்று வேலையைக் கட்டிக் கொண்டு, வீட்டையும் காதலியையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் ஆண்களைக் கண்டால் பெண்களுக்குக் கொஞ்சம் வெறுப்பு வருவதும் இயல்பு தானே. அப்படி அவர்களைக்கூட கண்டு கொள்ளாமல் யாருக்காகத்தான் சம்பாதிக்கிறார்கள். அதனால் இனியாவது வேலையைக் கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு காதலியையும் கொஞ்சம் கொஞ்சுங்கள்.

​காதலும் ரொமான்ஸ்சும்

samayam tamil

பெண்களுக்குப் பொதுவாகவே தன்னை எப்போதும் ரொமான்ஸ் செய்யும் ஆண்களை மிகப் பிடிக்கும். பெண்கள் எப்போதும் அவர்களாக முன்வந்து ஆணிடம் ரொமான்ஸ் செய்ய மாட்டார்கள். கேட்கவும் மாட்டார்கள். ஆண்களாகவே புரிந்து கொண்டு, தன்னுடைய காதலன் தான் தன்னிடம் வந்து ரொமாண்டிக்காக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி நடக்கவில்லை என்றால் அதுவே நாளடைவில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடும் பிரிவும் ஏற்பட வழிவகுக்கும்.

ரொமான்ஸ் வேறு. உறவுக்கு அழைத்தல் வேறு. சில ஆண்களுக்கு எப்போதும் இரண்டாவதில் தான் ஆர்வம் அதிகம். அதற்காகத் தனக்கு தோன்றும் போதெல்லாம் பெண்ணுக்கு விருப்பமா இல்லையா, பிடித்திருக்கிறதா என்ற எந்த கேள்வியும் இல்லாமல் அவர்களுடைய விருப்பத்தையும் மீறி தனக்குத் தோன்றும் போதெல்லாம் உறவுக்கு அழைக்கும் ஆண்களைப் பெண்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. வெறுப்பும் எரிச்சலும் தான் உள்ளுக்குள் அதிகமாகுமே தவிர, ஆசையோ காதலோ ஏற்படாது. இதுவே முன் விளையாட்டுக்கள், ரொமாண்டிக்கான பேச்சு என ஆரம்பிக்கும் ஆண்களைப் பெண்களுக்கு மிகப் பிடிக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.