உடலுறவின் போது சில பெண்களுக்கு ஏன் பிறப்புறுப்பு வறட்சியாகவே இருக்கிறது? காரணமும் தீர்வும் இதோ…
பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை அந்தரங்க பகுதியில் ஏற்படும் வறட்சி. இந்த வறட்சியினால் பெண்கள் உடலுறுவின் போது மிகுந்த வலியையும் கஷ்டத்தையும் அனுபவிக்கின்றனர். இந்த வறட்சியால் பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல் உண்டாகும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். இந்த வறட்சி பெண்களுக்கு உடலுறுவின் போது இன்பத்தை அளிப்பதற்கு பதிலாக வேதனையை அளிக்கிறது. அவர்கள் என்ன தான் வித்தியாசமான நிலையை கையாண்டால் கூட பலன் இருப்பதில்லை. வலியுடன் ஒரு பெண்ணால் உடலுறவு கொள்ள முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணுறுப்பில் ஈரப்பதத்தை கொடுக்க ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் மிகவும் முக்கியம். சில பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மையால் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது. பின்னர் இதுவே பெண்ணுறுப்பில் வறட்சியை உண்டாக்க காரணமாகி விடுகின்றன. இப்படி பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்பட எந்தெந்த காரணிகள் காரணம் அவற்றை எப்படி சரி செய்யலாம் அதற்கான சிகிச்சைகள் எவை என்பதை விரிவாக விளக்குகிறார் பெண்கள் நல மருத்துவர். வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ஒரு பெண்ணின் அனுபவம்

பொதுவாக உடலுறவில் ஈடுபடும் முன்னர் நிறைய தம்பதிகள் முன் விளையாட்டுக்களில் ஈடுபடுவது உண்டு. கட்டியணைத்தல், முத்தமிடுதல் என சிறிது நேர முன் விளையாட்டுக்குப் பிறகே உறவில் ஈடுபடுகிறார்கள். அந்த சமயங்களிலேயே அவர்களுடைய பிறப்புறுப்பு உறவுக்குத் தயாராகிவிடும். அதிக ஈரத்தன்மை ஏற்படும். ஆனால் மிகச் சிலருக்கு இதில் பிரச்சினை இருக்கிறது. என்ன தான் நிறைய பொசிஷன்கள் முயற்சி செய்தாலும் சில பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சியாக இருப்பதாகவே உணர்கிறார்கள். அது ஏன்? அதனால் உறவில் ஈடுபடும் இருவருக்குமே ஈடுபாடு குறைய வாய்ப்புண்டு. அப்படி பிரச்சினை இருக்கிற ஒரு பெண் தன்னுடைய அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம்.
எனக்கு வயது 28, நானும் என் கணவரும் ஒரு அன்பான திருமண வாழ்க்கையை அனுபவித்து வருகிறோம். பாலியல் விளையாட்டுகள் அனைத்தையும் நாங்கள் முயற்சி செய்கிறோம். ஆனால் இருப்பினும் நான் ஒரு சிக்கலை அனுபவித்து வருகிறேன். உடலுறுவின் போது என் பெண்ணுறுப்பில் வறட்சி உண்டாகிறது. இதனால் வலி அதிகமாக உணர்கிறேன்.
பெண்ணுறுப்பு வறட்சி

நாங்கள் நீண்ட நேரம் காதல் விளையாட்டு கள் விளையாண்டால் கூட என்னால் இந்த பிரச்சினையை சரி செய்ய முடியவில்லை. விதவிதமான அமர்வுகளில் கூட நாங்கள் முயற்சி செய்து பார்த்து விட்டோம். சில நேரத்திற்கு பிறகு அசெளகரியத்தை உணர்கிறேன். வலிக்கத் தொடங்குகிறது. இதனால் எங்கள் தாம்பத்ய வாழ்க்கை இன்பகரமாக இருப்பதில்லை. நாங்கள் சந்தோஷமாக இருக்க வழி சொல்லுங்கள். என் அந்தரங்க பகுதியில் ஏற்படும் வறட்சியை எப்படி போக்குவது, இதற்காக எதாவது சிகிச்சை முறைகள் இருக்கின்றனவா?
பெண்கள் நல மருத்துவரின் கருத்துக்கள்

பெண்ணின் அந்தரங்க பகுதி இயற்கையாகவே ஈரப்பதமான ஒன்று. அந்தப் பகுதியில் உள்ள லாக்டோபாகிலஸ் என்ற பாக்டீரியா பெண்ணுறுப்பின் pH அளவையும் ஈரப்பதத்தையும் சமமாக வைக்கிறது. இது பெண்ணுறுப்பை சுத்தமாகவும், வெளிப்புற கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமலும் பராமரிக்கிறது. பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதி அதிக வறட்சியுடன் எப்போதும் காணப்படுவதில்லை. அதிலும் உடலுறவு சமயத்தில அப்படி இருக்காது. அப்படி அதிகப்படியான வறட்சியை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது. பிறப்புறுப்பின் பிஎச் அளவை ஈரப்பதத்தையும் பராமரிக்க வேண்டியது மிக முக்கியம்.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பயன்பாடு

ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஒரு பெண் பருவமடைய காரணமான ஹார்மோன். மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்த நாட்களில் இருந்து மாதவிடாய் சுழற்சி நிற்கும் வரை இந்த ஹார்மோன் சுரப்பு ஒரு குறிப்பிட்ட அளவு இருந்து கொண்டே இருக்கும். இந்த ஹார்மோன் சுரப்பு தான் பெண்ணுறுப்பை தடினமாகவும் மீள் தன்மையுடன் பிசு பிசுபிசுப்பு தன்மையுடன் வைத்திருக்கும்.
இந்த ஹார்மோன் பல காரணங்களால் குறைய வாய்ப்புள்ளது. இதனால் தான் பெண்ணுறுப்பில் வறட்சி உண்டாகிறது.
எப்போது குறைாடு வரும்?

பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் கொடுக்கும் போது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவு தற்காலிகமாக குறைகிறது.
ஆண்டிஹிஸ்டமின்கள் அல்லது ஆண்டிடிரஸண்ட்ஸ் அல்லது கீமோதெரபி போன்ற சில மருந்துகளும் பெண்ணுறுப்பில் வறட்சியை உண்டாக்குகின்றன.
பெண்ணுறுப்பில் ஏற்படும் தொற்றுகள், அதிகமாக புகைப்பிடித்தல் போன்ற பிரச்சினைகளும் அந்தரங்க பகுதியில் வறட்சியை ஏற்படுத்துகிறது.
வயதாகும் போது

40 வயதிற்கு பிறகு மாதவிடாய் நிற்கும் காலகட்டம். இந்த கால கட்டத்திலும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையத் தொடங்கும். எனவே வயதான பெண்கள் அந்தரங்க பகுதியில் வறட்சியை அனுபவிக்கின்றனர். இதனால் பெண்ணுறுப்பில் மாற்றங்கள் ஏற்படும். மாதவிடாய் இரத்த போக்கில் மாற்றம், உலர்ந்து போதல், அதன் வெளிப்புற பகுதி மென்மையாதல் போன்றவற்றை சந்திக்கின்றனர். இதற்கு மருத்துவ ரீதியாக பெண்ணுறுப்பு அட்ராபி என்று பெயர்.
சிகிச்சைகள்

பெரிமெனோபாஸ் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களில் 20 சதவீதம் பேர்கள் இந்த பிரச்சினைக்கு சிகச்சை காண்கின்றனர். ஆனால் இந்த அறிகுறிகள் கிட்டத்தட்ட 40-50 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. பெண்ணுறுப்பு வறட்சியானது வலிமிகுந்த செக்ஸ் (டிஸ்பாரூனியா), அடிக்கடி பெண்ணுறுப்பில் நோய்த்தொற்றுகள், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலுறவின் போது இரத்தப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்துமாம்.
பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்பட்டால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றும்
பெண்ணுறுப்பில் வறட்சி
அரிப்பு
எரிகின்ற தன்மை உண்டாக்கும்
லேசர் சிகிச்சை

பெண்ணுறுப்பில் ஏற்படும் வறட்சியை போக்க லாக்டோபாகிலஸ் அடங்கிய உணவான யோகார்ட், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஈஸ்ட்ரோஜன் க்ரீம், லேசர் புத்துணர்ச்சி சிகிச்சை மேற்கொள்ளலாம். இந்த லேசர் சிகிச்சை மூலம் பெண்ணுறுப்பு சருமத்தில் உள்ள கொலஜெனை உற்பத்தி செய்து மீளுருவாக்கம் செய்கின்றனர். முகத்தில் உள்ள சரும செல்களை புத்துணர்ச்சி பெற உதவிய அதே சிகச்சையை தற்போது பெண்ணுறுப்பிற்கும் பயன்படுத்தி வருகின்றனர் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த சிகிச்சைக்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.
செய்யும் முறை
முதலில் பிறப்புறுப்புப் பகுதியை நன்றாக ஒரு துணியை கொண்டு துடைத்து விடுகின்றனர். பிறகு லேசர் ஒளிக் கருவி சொருகப்பட்டு குறைந்த அதிர்வில் வறட்சியை சரி செய்கின்றனர். இது பெண்களுக்கு வலியற்ற சிகிச்சை மட்டுமல்லாமல் அந்தரங்க பகுதி வறட்சியையும் சரி செய்கிறது. 5 நிமிடங்கள் மட்டுமே செய்யப்படுகிறது.
சுமார் 30 நாட்களில் பெண்ணுறுப்பு பகுதியில் உள்ள திசுக்கள் மீள் உருவாக்கம் ஆகிறது. இந்த புதிய இயற்கையான திசுக்கள் உங்க பெண்ணுறுப்பு பகுதிக்கு ஈரத்தன்மை, பிசுபிசுப்பு தன்மையை கொடுத்து உடலுறுவின் போது வலி ஏற்படுவதை குறைக்கிறது என்கிறார் பெண்கள் நல மருத்துவர். பெண்ணுறுப்பின் மீள் தன்மையையும் மீட்டெடுக்க முடியும்.
கருத்துக்களேதுமில்லை