பல் துலக்கும்போது தினமும் நாக்கை சுத்தம் செய்யலாமா? எத்தனை நாளுக்கு ஒருமுறை செய்வது நல்லது?

நாக்கை சுத்தம் செய்வது என்பது நாக்கில் படிந்திருக்கும் தேவையற்ற அழுக்குகளை நீக்குவது மற்றும் இதர துகள்களை நீக்குவது ஆகும். இதை சிலர் நாக்கு வலிப்பது என்று கூறுவார்கள். நாக்கில் இவ்வாறு படிந்திருக்கும் துகள்கள் மற்றும் அழுக்குகள் நம் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதை செய்வதற்கு சிறிய ஸ்பூன் போன்ற ஒரு பொருள் கடையில் கிடைக்கிறது. இது பிளாஸ்டிக் மற்றும் ஸ்டைன்லேஸ் ஸ்டீல் வகைகளிலும் கிடைக்கிறது. தினமும் நாக்கை சுத்தம் செய்வதினால் பல விஷயங்களில் நமக்கு உபயோகமாக இருக்கிறது. நாக்கை சுத்தம் செய்வதனால் பல் தேய்க்காமல் இருந்துவிடலாம் என்பது அர்த்தமில்லை. கண்டிப்பாக பல் தேய்ப்பது வேறு நாக்கை சுத்தம் செய்வது வேறு. ஆனால் நாக்கை தினமும் சுத்தம் செய்வது தினமும் பல விஷயங்களில் பிரயோஜனமாக இருக்கிறது. நம் உடல் ரீதியாகவும் உடல்நலம் ரீதியாக மட்டுமில்லாமல் நாவின் சுவை போன்ற பல விஷயங்களுக்கு நாக்கை சுத்தம் செய்வது உறுதுணையாக இருக்கிறது இதை காலை மற்றும் இரவு இரண்டு முறை செய்யலாம் என்று கூறுகின்றனர்.

​நாக்கை சுத்தம் செய்வது என்றால் என்ன?

samayam tamil

தினமும் நாக்கை சுத்தம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன அவைகளில் முக்கியமான நன்மைகள் என்னவெனில்,

நாவின் சுவை: நடந்த சில ஆய்வுகளின் படி தினமும் இரண்டு நேரம் நம் நாக்கை சுத்தம் செய்வதால் நாக்கில் உள்ள சுவை தன்மை அதிகரிக்கும் என்று குறிப்பிடுகின்றனர் நம் நாக்கில் சிறிய துகள் அதிகமாக இருக்கின்றன அந்த துகள்கள் வழியாகவே நாம் ருசியை உணர்கின்றோம். நாவின் மேற்பரப்பில் தேவையற்ற அழுக்குகள் படிந்திருப்பதால் அந்த சுவைகள் செல்லக் கூடிய சிறிய துகள்கள் மறைந்திருக்கும். இதனால் சரியான அளவில் ருசி தெரிவது இல்லை. நாவை தினமும் சுத்தம் செய்வதினால் நாவின் ருசி மிகவும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

​நாவின் தோற்றம்

samayam tamil

நாவில் தேவையற்ற அழுக்குகள் மற்றும் கிருமிகள் அதிகமாக இருக்கின்றது. இவைகளை நாம் தினமும் இரண்டு நேரம் சுத்தம் செய்வதினால் நாவில் தேவையற்று படிந்து கிடக்கும் அழுக்குகள் அகற்றப்படுகிறது. இப்படி நாவில் தேவையற்று கிடக்கும் அழுக்குகள் சுத்தம் செய்வதினால் நாவின் நிறம் தெளிவாக தெரியும் நாவின் தோற்றமும் அழகாக மாறும்.

சிலருக்கெல்லாம் சரியாக சுத்தம் செய்யாமல் போனால், வாய் துர்நநாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல், நாக்கின் மேல் பகுதியில் வெள்ளை நிறத்தில் லேயராகப் பதிந்து விடும்.

​பாக்டீரியாவை அழிக்கும்

samayam tamil

நாவை தினமும் இரண்டு முறை சுத்தம் செய்வதினால், நாவில் உள்ள அனைத்து அழுக்குகளும் வெளியேறி நாவில் உள்ள பாக்டீரியா, தேவையற்ற இறந்த செல்கள், மற்றும் அழுக்குகள் சுத்தமாக வெளியேறிவிடும்.2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வில் தினமும் இரண்டு முறை நாவை சுத்தம் செய்வதினால் நாக்கில் உருவாகக்கூடிய ஒரு வகை பாக்டீரியா உருவாகும் அதனைஅழித்துவிடலாம். அந்த பாக்டீரியாக்களை முக்கியமாக நமக்கு சுவாச துர்நாற்றத்தை அளிக்கிறது என்று குறிப்பிடுகின்றனர். சுவாச துர்நாற்றம் மற்றும் அல்லாமல் பற்களில் ஏற்படக்கூடிய ஒரு சில பிரச்சனைகளுக்கும் இந்த பாக்டீரியாக்களே பெரும் பங்கு வகிப்பதாக கூறுகின்றனர் எனவே தினமும் இரண்டு முறை நாக்கை சுத்தம் செய்வதால் இந்த தேவையற்ற பாக்டீரியாக்களை அழித்து சுவாச துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெறலாம் என்று கூறுகின்றனர்.

​உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்

samayam tamil

பொதுவாகவே உடலில் தேவையற்ற இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கி விட்டாலே நம் உடல்நலம் பலவகையில் முன்னேற்றம் அடைந்து விடும். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பது வகை வகையான பாக்டீரியா ஆகும். அதுபோன்று நம் நாவிலும் பல விதமான பாக்டீரியாக்கள் இருக்கின்றது. நாம் உணவில் எடுத்துக்கொள்ளும் அனைத்து உணவுமே நாம் வாய் வழியாக தான் உடலுக்குள் செல்கிறது. அனைத்து உணவும் நம் நாவில் பட்டு தான் உடலுக்குள் செல்கிறது. தினமும் பற்களை தேய்த்து சுத்தம் பண்ணி விடுகிறோம் ஆனால் நாவில் இருக்கும் பலவகையான பாக்டீரியாக்களை நாம் சுத்தம் செய்வதைப் பற்றி பலரும் யோசிப்பதில்லை. நாவில் பல வகையான பாக்டீரியாக்கள் இருக்கிறது இதை சுத்தம் செய்வது மிகவும் அவசியம் தினமும் இரண்டு முறை நாவில் இருக்கும் பாக்டீரியாக்களையும் சுத்தம் செய்வதினால் உடலுக்குள் செல்லக்கூடிய வேலைகளையும் தடுத்து விடலாம். இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படுகிறது.

​சுவாச துர்நாற்றத்தை நீக்குகிறது

samayam tamil

ஏற்கனவே நாம் சொன்னபடி சுவாசத்தில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு பற்கள் மட்டும் காரணமல்ல. தினமும் பல் தேய்க்க வேண்டியது மிகவும் அவசியம். அதை போலவே நாக்கை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். பற்களில் மட்டுமல்லாமல் நாக்கிலும் பல வகையான பாக்டீரியாக்கள் இருப்பதால் அந்த பாக்டீரியாக்கள் துர்நாற்றத்தை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஒரு சில ஆய்வுகளில் பல்டி வைப்பதைவிட நாக்கை சுத்தம் செய்வது துர்நாற்றத்தை அதிகமாக அழிந்துவிடுகிறது என்று கண்டு பிடித்து உள்ளனர். எனவே தினமும் முக்கியமாக நாக்கை சுத்தம் செய்வதும் நம் அனைவருக்கும் முக்கியமான காரியமாக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.