மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஏன் மார்பகங்கள் வலிக்கிறது? அது நார்மலா? ஆபத்தா?

பெண்களுக்கு மாதவிடாய் என்பது ஒரு வலி மிகுந்த பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த 5 நாட்கள் என்பது பெண்களுக்கு இயற்கையான நரகம் என்றே கூறலாம். சிலருக்கு உடம்பு வலி, அடிவயிற்று வலி, வாந்தி, பசியின்மை மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளைக் கூட சந்திக்கின்றனர். இது போக மனநிலை மாற்றம், சோர்வு போன்ற பிரச்சினைகளும் பெண்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த பிரச்சினைகளோடு மட்டும் மாதவிடாய் முடிவதில்லை. சிலருக்கு மாதவிடாய் காலங்களில் மார்பக வலிக்கூட ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கடுமையான மார்பக வலியையும் இந்த மாதவிடாய் வலியோடு சேர்த்து அனுபவித்து வருகிறார்கள். மார்பகத்தில் புண்கள், மென்மை மற்றும் வீக்கம் போன்றவை இந்த கால கட்டத்தில் ஏற்படுகிறது. இதனால் பெண்களின் அன்றாட வேலைகள் பாதிப்படையக் கூடும். மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மார்பக காம்புகளின் வளர்ச்சியை தூண்டி ஒரு வித வலியை உண்டாக்குகிறது. இந்த வலி மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னதாகவே ஏற்படுகிறது. இப்படி மார்பகத்தில் ஏற்படும் வலி ஆபத்தானதா? இதற்கு பெண்கள் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர் சில விளக்கங்களை நமக்கு கூறுகிறார்.

​ஏன் மார்பக வலி உண்டாகிறது

samayam tamil

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். இதனால் மார்பகத்தில் உள்ள இரத்த குழாய்கள் விரிவடைந்து மார்பகத்தில் மாற்றங்களையும் வலியையும் உண்டாக்குகிறது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பு மார்பக நாளங்களில் விரிவை ஏற்படுத்துகிறது. உங்க மாதவிடாய் காலங்களில் 1 வாரத்திற்கு முன்பு புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிப்பால் மார்பகத்தில் உள்ள பால் சுரப்பிகள் பெருகும். இதனால் அந்த பகுதியில் மார்பக வலி உண்டாகிறது.

​இந்த மார்பக வலி ஆபத்தானதா

samayam tamil

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மார்பக வலியை குறித்து அதிகமாக கவலைப்பட தேவையில்லை. இருப்பினும் வேறு சில அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் அது மார்பக புற்றுநோயாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மார்பகத்தில் அல்லது அக்குள்களில் கட்டிகள் காணப்படுதல், சிவந்து இரத்தம் வடிவது, சீழ் வடிவது, தூங்குவது கூட கடினமாக இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்லது. மார்பகங்களில் அளவு மாற்றம், காம்புகள் உள்நோக்கி திரும்புதல், சிவத்தல், மார்பக தோலில் மாற்றம் போன்றவை தென்பட்டாலும் உடனே நீங்கள் பரிசோதனை செய்வது நல்லது.

​பெண்களுக்கு ஏற்படும் மார்பக வலியின் வகைகள்

samayam tamil

பெண்களுக்கு ஏற்படும் மார்பக வலியை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

சுழற்சி மார்பக வலி :

இந்த மார்பக வலி பெண்களால் பொதுவாக உணரப்படும் வலிகளுள் ஒன்று. இது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மட்டுமே உண்டாகக் கூடியது.

சுழற்சி அற்ற மார்பக வலி

இந்த மார்பக வலிக்கும் மாதவிடாய் சுழற்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த வலியை பெண்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் உணர வாய்ப்புள்ளது. இது குறிப்பாக மாதவிடாய் நின்ற வயதான பெண்களுக்கு ஏற்படுகிறது.

​மாதவிடாய் சுழற்சி மார்பக வலியின் அறிகுறிகள்

samayam tamil

பெண்களின் இரண்டு மார்பகங்களிலும் வலி உணரப்படும்

சில சமயங்களில் மார்பகங்களில் வீக்கம், புடைப்பு ஏற்படலாம்.

இந்த வலி மாதவிடாய்க்கு முன்பிருந்து ஒருவாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

இந்த வலி மேற்பரப்பில் ஏற்பட்டு அப்படியே பரவக் கூடும். இது பொதுவாக இளம் பெண்களுக்கு ஏற்படுகிறது.

​மார்பக வலியை எப்படி எளிதாக போக்கலாம்

samayam tamil

மாதவிடாய் காலங்களில் அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிருங்கள்

காபி, சாக்லேட்டுகள், டீ, குளிர் பானங்கள் இவற்றை தவிருங்கள்.

மாதவிடாய் ஆரம்பமாகும் 10 நாட்களுக்கு முன்பு இருந்தே உணவில் உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மார்பக அளவிற்கு ஏற்றமாதிரி சரியான பிராவை தேர்ந்தெடுத்து அணியுங்கள்.

மார்பகத்தில் ஏற்படும் வலியை போக்க உடற்பயிற்சி சிலவற்றை செய்யுங்கள்.

விட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரியுங்கள், ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகளை உண்ணுங்கள்.

மாதந்தோறும் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இது உங்க மார்பக ஆரோக்கியத்தை எடுத்துக் கூற உதவும்.

​மார்பக வலியை போக்க எளிமையான வீட்டு வைத்தியங்கள்

samayam tamil

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை போக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மார்பக வலியை குறைக்கும்.

ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை கட்டி அதை மார்பகத்தில் வைத்து 20 நிமிடங்கள் ஒத்தடம் கொடுங்கள்.

விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை மார்பகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம். இதுவும் வலியை குறைக்க உதவி செய்யும்.

மாதவிடாய் காலங்களில் வாழைப்பழத்தை சாப்பிடுவது உங்க மார்பக வலியை போக்க உதவியாக இருக்கும். இதற்கு காரணம் இதிலுள்ள பொட்டாசியம் சத்து இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

மார்பக வலியை குறைக்க மருந்துகள்

samayam tamil

மார்பக வலி கடுமையாக இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள். அவர் உங்களுக்கு டானசோல் மற்றும் பார்மிஃபென் போன்ற வலி நிவாரணி மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

இல்லையென்றால் வலி ஏற்படும் இடத்தில் ஸ்டீராய்டு ஊசிகள் மற்றும் மரத்துப் போகும் ஊசிகளை பரிந்துரைக்கலாம்.

மார்பக வலி தொடர்ச்சியாக இருந்தால் மட்டுமே ரொம்ப அரிதான சமயங்களில் அறுவை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மற்றபடி இந்த வலியை மருந்துகள் மூலமே சரி செய்ய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.