face scrub : சருமத்தில் இறந்த செல்லை அழிக்க பழத்தோலில் ஸ்க்ரப் பொடி தயாரிக்கலாமா?
இந்த பழத்தோலை சன்னமாக உடைத்து வைத்தால் எப்போது வேண்டுமானாலும் முகத்துக்கு ஸ்க்ரப் செய்யலாம்… பளிச் என்று புத்துணர்வாய் இருக்கும் முகம்..
ஸ்க்ரப்
வெளியில் சென்றால் தூசி, மாசு முகத்திலும் படியும் தான். இதை வெளியேற்றும் சருமத் துவாரங்களில் அடைப்பு இருப்பதை நீக்கதான் ஸ்க்ரப் செய்கிறொம். பொதுவாக முகத் துக்கு ஃபேஷியல் போடும் போது அழகு நிலையங்களிலும் முகத்துக்கு ஸ்க்ரப் செய்வது வழக்கமாக இருந்தது. தற்போது வீடுகளிலேயே ஸ்க்ரப் செய்வது அதிகரித்துவருகிறது.
சருமத்தில் இருக்கும் செல்கள் அழிவதும் பிறகு உருவாவதும் உண்டு என்பது தெரியும். அப்படி அழியும் செல்கள் வெளியேறும் போது சருமம் பளிச்சென்று ஃப்ரெஷ்ஷாக இருக் கும். ஆனால் சரும துவாரங்களில் ஏற்கனவே தூசியும், மாசும் படிந்திருந்தால் அவை வெளியேறமால் அங்கேயே தங்கி விடும். இதனால் நாளடைவில் சருமம் சொரசொர வென்று ஆவதோடு வயதான தோற்றத்தையும் உருவாக்கிவிடும். இதை போக்கதான் ஸ்க்ரப் செய்கிறோம்.
பயன்படுத்தும் பொருள்கள்
ஸ்கரப் என்பது சற்று சொரசொரப்பான பொருளை கொண்டு முகத்துக்கு செய்யப்படும் மசாஜ். இப்படி செய்யும் போது சருமம் பளிச் என்று ஆவதோடு புத்துணர்வும் பெறுகிறது. கடைகளில் ஸ்க்ரப் க்ரீம்களை தாண்டி வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருள்களும் அதிகம் உண்டு. சர்க்கரை, கோதுமை தவிடு, ரவை, உப்பு, ஓட்ஸ் போன்றவற்றை ஸ்க்ரப் செய்ய பயன்படுத்துகிறோம். இவையெல்லாமே சருமத்தில் மசாஜ் செய்யும் போது சிறந்த பலன் அளிக்கும்.
இதனோடு எலுமிச்சை, தயிர், தக்காளி, வெள்ளரி, கற்றாழை என்ற பொருள் ஒன்றையும் சேர்த்து செய்வதுண்டு. ஆனால் ஸ்க்ரப் செய்வது அழகோடு ஆரோக்கியத்தையும் மீட்டெ டுக்கும் செயல் என்பதால் பயன்படுத்தும் பொருளையும் கவனமாக பயன்படுத்த வேண் டும். அந்த வகையில் நாம் வீணாக தூக்கியெறியும் பழங்களின் தோலை பதப்படுத்தி ஸ்க்ரப் செய்யலாம். அது குறித்து பார்க்கலமா?
பழத்தோல்கள் ஆரஞ்சு பழத்தோல் -1
பொதுவாக பழத்தோல்கள் மென்மையாக இருக்கும். வாழைப்பழத்தோலை கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யலாம் என்பதையும் நாம் முன்பே குறிப்பிட்டிருக்கும். ஆனால் ஆரஞ்சு, மாதுளை பழத்தோல்கள் உலரவைத்து பொடிக்கும் போது மிருதுவான தன் மையை இழந்து விடுவதால் இதை ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு பழத்தோலை நார் நீக்கி உலர வையுங்கள். இதன் மிருதுவான தன்மை நீங்கி காயும் வரை உலரவிட்டு இதையும் ரவை போன்று உடைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து வையுங்கள். ஸ்க்ரப் செய்வதற்கு என்பதால் இப்படி அரைப்பது தான் நல்லது.
மாதுளை -2
மாதுளை சத்துகள் நிறைந்தது என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. மாதுளைப் பழத்தின் முத்துக்கள் சாறை பிழிந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் இயற்கை யாகவெ பிங்க் நிறத்தில் மாறும் என்பது நமக்கு தெரியும். அதே போன்று மாதுளையின் தோலை பதப்படுத்தி நிழலில் உலர்த்துங்கள். பிறகு அதை மிஷினில் அல்லது மிக்ஸியில் ரவையாக பொடித்து மெல்லிய துணியில் சலித்து கண்ணாடி பாட்டிலில் பதப்படுத்தி வையுங்கள். 6 மாதங்கள் வரையிலும் கூட இவை கெடாமல் இருக்கும்.
மாதுளை தோலில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் சருமத்தில் இருக்கும் அழிந்த செல் களை வெளியேற்றுவதோடு புதிய செல்களின் உற்பத்திக்கும் உதவும் என்பதால் ஸ்க்ரப் செய்வதற்கு நல்ல தீர்வாக இவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சருமத்தின் பாது காப்பை உறுதி செய்யும் கொலாஜின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இதனால் முகச்சுருக்கங்களும் எளிதில் வராது, வறட்சியான சருமத்தை மீட்டு ஈரப்பதத்தை அளிக்கவும் உதவும் என்பது கூடுதல் சிறப்பு.
எப்படி ஸ்க்ரப் செய்வது
பழத்தோலை கொண்டு ஸ்க்ரப் செய்வதாக முடிவு செய்தால் ஆரஞ்சு, மாதுளை இரண் டுமே நல்லது. அல்லது இரண்டையும் சேர்த்தும் உலர வைத்து உபயோகிக்கலாம். ஆனால் ஸ்க்ரப் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் கண்டிப்பாக ரவை போன்று உடைத்து பாட்டிலில் அடைத்து கொள்ளுங்கள். ஸ்க்ரப் செய்யும் போது இதனுடன் தயிர், எலுமிச்சை, கற்றாழை இவற்றில் ஒன்றை கலந்து பயன்படுத்தினாலே போதுமானது.
பொதுவாக ஸ்க்ரப் செய்யும் போது சருமத்தில் பருக்கள், தழும்புகள், வடுக்கள் இருப் பவர்களுக்கு எரிச்சல் வரவும் வாய்ப்புண்டு. ஆனால் இந்த இயற்கை ஸ்க்ரப் சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்றுவதோடு சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
இனி மாதுளை தோலையும், ஆரஞ்சு தோலையும் வீசி எறியாமல் ஸ்க்ரப் செய்ய பயன் படுத்துங்கள். மற்ற எல்லா பொருள்களையும் விட இவை சருமத்துக்கு நூறுசதவீதம் நன்மையை மட்டுமே செய்யும் அழகு வாரியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும்.
கருத்துக்களேதுமில்லை