இதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது

நீங்க சாப்பிடுகிற உணவு தான் உங்க ஹாபிட், பீலிங்ஸ் எல்லாத்தையும் தீர்மானிக்கும். சாப்பாடு நமக்கு சக்தி கொடுத்து நமக்கான இடத்தை இங்க தக்க வைத்திருக்க உதவுகிறது. சத்தான ஆரோக்கியமான உணவு எடுத்துகிறவங்க எப்போவுமே எனெர்ஜியா, தன்னம்பிக்கையா, பொறுமையா இருப்பாங்க.கெட்ட உணவுகளை சாப்பிடுறவங்க எப்போவுமே நெகட்டிவிட்டியா தான் இருப்பாங்க.இப்போ புரியுதா?ஆரோக்கியமான உணவு நமக்கு எவ்வளவு முக்கியம்னு!

நமது அன்றாட உணவில் அதிக நீர்ச்சத்து, நல்ல கொழுப்பு மற்றும் நார்ச்சத்து இருக்குற காய்கறிகளை நிறைய சேர்த்துக்கணும்.

சருமத்தில் காலோஜன் உற்பத்தியை அதிகரிக்க முட்டை,மட்டன் மற்றும் ஆரஞ்சு இந்த மாதிரி வைட்டமின் சி அதிக இருக்குற உணவுகளை சேர்த்துக்கொள்வது அவசியம். இந்த நார்ச்சத்துள்ள புரதங்கள் சருமத்திற்கு வலிமையையும் பொலிவையும் தரும்.இதில சொல்லியிருக்குற உணவுகளை டெய்லி எடுத்துக்கிட்டா தோல் எப்பொவுமே பொலிவோட இளமையா இருக்கும்,அதனால உங்களுக்கு வயசு ஆகுற மாதிரியே தெரியாது.

பப்பாளி
நாம இருக்குற இடத்திற்கு பக்கத்திலேயே பப்பாளி மரங்கள் அதிகமா பார்க்கலாம். நமக்கு ரொம்ப ஈஸியா கிடைக்குற இந்த பழத்துல எக்கச்சக்க நன்மைகள் இருக்கு.
பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் ஈ மற்றும் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. பப்பாளியில் பப்பேன் என்சைம் இருப்பது தோல் சுருக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.

papaya

கீரைகள்:

கீரையின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் அறிந்திருப்போம். கீரையில் இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இவை தவிர, கீரையில் அதிக வைட்டமின் சி உள்ளதால் உடலில் காலோஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

keerai1

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை அதிகளவில் உள்ளன, அதே போல் அந்தோசயனின் எனப்படும் வயதைக் குறைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வெயில், மன அழுத்தம் மற்றும் மாசுபாட்டால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. ப்ளூபெர்ரி நம்மூரில் கிடைக்காது என கவலைப்படுபவர்கள் நெல்லிக்காயை மாற்றாக பயன்படுத்தலாம்.

blueberry

பாதாம்

பளபளப்பான, முகப்பரு மற்றும் பரு இல்லாத பளிச் சருமத்தைப் பெற பாதாம்  உங்களுக்கு உதவும். இந்த கொட்டையில் வைட்டமின் ஈ இருப்பது சருமத்தை மென்மையாக்குகிறது. பாதாம் சற்று விலை அதிகம் என்று கருத்துவோருக்கு இருக்கவே இருக்கிறது வேர்க்கடலை. பாதாமை விட அதிக சத்துக்கள் நம் மண்ணின் நிலக்கடலையிலும் இருக்கிறது.

padam

குடை மிளகாய்

குடை மிளகாயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி உடன் நிறைந்துள்ளது, இது காலோஜன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும், கரோட்டினாய்டுகளின் இருப்பு சுற்றுப்புற நச்சுகளுக்கு எதிராக சருமத்தைப் பாதுகாக்கும். தோல் சுருக்கம் வரவிடாமல் இவை சருமத்தை  பாதுக்காக்கும்.

cilli

பொலிவான முகத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள இந்த உணவுகளை சேர்ப்பது தவிர, நாள் முழுவதும் அதிகளவில் தண்ணீரை குடிக்க வேண்டும்.  ஸ்ட்ரெஸ்இல்லாம இருந்தாலே பாதி பிரச்சனை வராதுங்க. அதனால  எப்போதும் ரொம்ப யோசிக்காதிங்க. நல்லா தூங்குனா எல்லாமே சரியா இருக்கும். நல்லா சாப்பிடுங்க! நல்லதை சாப்பிடுங்க!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.