வயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க!

சிலருக்கு வயிறு எப்போதும் அடைத்தபடி இருக்கும். சாப்பிட்ட பிறகு என்றில்லாமல் சாப்பிடுவதற்கு முன்பும் கூட இந்த நிலை இருக்கும். அதிக அளவு உணவு சாப்பிட்டுவதால் வயிறு உப்புசம் வருவதில்லை. வாயு பிரச்சனையால் வரக்கூடும். ஒவ்வாமை தரும் உணவு பொருள்கள் பெருங்குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை உடைக்கும் போது வாய்வு பிரச்சனை உண்டாகும். அல்லது வாய்வழியாக செல்லும் காற்று நமது இரைப்பை, குடல் சென்று பிறகு ஆசனவாய் வழியாக வெளியேறிவிடாமல் உடலில் தங்கிவிடும்போதும் வயிறு வீக்கமும் வயிறு உப்புசமும் உண்டாகிவிடுகிறது. வயிறு உப்புசம் ஏன் உண்டாகிறது என்பதை தெரிந்துகொண்டோம். இப்படி வயிறு உப்புசத்தோடு இருக்கும் நேரங்களில் அதை அதிகரிக்கும் வகையான உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

​பயறு வகைகள்

samayam tamil

பயறு வகைகள் புரோட்டின் அதிகமாக இருக்கிறது. தானியங்களை விட இரண்டு மடங்கு புரோட்டின் சத்து கொண்டிருக்கும் பயறு வகைகள் உடலுக்கு அவசியம் தேவையான ஒன்று. அசைவ உணவுகளை எடுக்காதவர்கள் அதிலிருக்க்கும் சத்துகளை பயறு வகைகளில் இருந்து பெறமுடியும் என்றாலும் இதை அதிகம் எடுக்க கூடாது. உடலுக்கு தேவையான அளவு மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகள் இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. அதோடு வயிறு உப்புசம் வீக்கம் உணரும் தருணத்தில் கண்டிப்பாக பயறு வகைகள் எடுத்துகொள்ள கூடாது.

 

மொச்சை, பட்டாணி, பருப்பு, பீன்ஸ், சோயா பீன்ஸ், முளைகட்டிய தானியங்கள் இவைகள் வயிறு உப்புசத்தை மேலும் அதிகரிக்ககூடியவை. புரதங்கள் நிறைந்த உணவை தவிர்ப்பது வயிறு உப்புசத்துக்கு மிகவும் நல்லது.

தானியங்கள்

samayam tamil

கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற தானியங்கள் ஃபைபரை கொண்டிருக் கின்றன. நார்ச்சத்து நிறைந்த தானியங்கள்உடலுக்கு நன்மை தரும். ஆனால் செரிமானப் பிரச்சனைகள் இருப்பவர்கள் தானியங்களை அதிக அளவு எடுத்துகொள்ள கூடாது. குறிப்பாக வயிறு வீக்கம், வயிறு கோளாறு, வயிறு உப்புசம் பிரச்சனை வரும் போது தானியங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் தினமும் சப்பாத்தி, கேழ்வரகு அடைகள் சாப்பிடுவதுண்டு. ஆனால் வயிறு உப்புசம் இருக்கும் போது சில நாட்கள் இதை தவிர்ப்பது நல்லது. அல்லது இயன்றளவில் குறைத்து சாப்பிட வேண்டும்.

 

வெங்காயம், பூண்டு

samayam tamil

அன்றாட உணவில் வெங்காயம், பூண்டு இல்லாமல் நமது உணவு பொருள்கள் எதுவுமே இல்லை. இரத்த விருத்திக்கு உதவும் வெங்காயம் உடலை தேற்றும் அருமருந்து என்றும் சொல்லலாம். பூண்டின் மகத்துவம் கூட அப்படிதான். உடலில் அருமருந்தாக செயல்படும் பூண்டையும் வெங்காயத்தையும் சுவைக்காக உணவில் சேர்க்கிறோம். ஆனால் இதை வயிறு உப்புசத்தின் போது தவிர்ப்பது வயிற்றுக்கு நல்லது.

நாள் முழுக்க வயிறு உப்புசம் இருந்தால் இரண்டு நாள் வரை வெங்காயத்தையும் பூண்டையும் தவிர்த்து உணவு எடுத்து கொள்வது வயிற்றை மென்மையாக்கும். காய்கறிகளில் வாழைக்காய், முட்டை கோஸ், உருளை, சேனை, மரவள்ளிக்கிழங்கு, காலிஃப்ளவர் மற்றும் ப்ரக்கோலி போன்றவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பால்

samayam tamil

கால்சியம் நிறைந்த பால் தினமும் எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். பாலில் கால்சியம் தவிர்த்து உடலுக்கு தேவையான சத்துகள் அதிகளவு நிறைந்திருக்கிறது. தினமும் ஒரு கப் பால் அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துவது உண்டு. ஆனால் இதில் இருக்கும் லாக்டோஸ் செரிமான பிரச்சனையை அதிகரிக்கும் என்பதால் வயிறு உ ப்புசமாக இருக்கும் நேரங்களில் இதை தவிர்த்து விடுவது நல்லது. பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றாலும் புரோபயாடிக் நிறைந்த தயிர் எடுத்துகொள்வது நன்மை தரும்.

செயற்கை குளிர்பானங்கள்

samayam tamil

வயிறு உப்புசத்தை உடனடியாக நீக்கும் தன்மை செயற்கை குளிர் பானங்களுக்கு உண்டு என்பதால் பலரும் இதை விரும்புகிறார்கள். வயிறு வீக்கம், வயிறு உப்புசம் வந்ததும் உடனடியாக செயற்கை குளிர்பானங்களை குடிக்கிறார்கள். ஆனால் இவை தற்காலிக தீர்வு போன்று இருந்து உடனடியாக வயிற்று உப்புசத்தை அதிகரித்துவிடும்.

விருந்தின் போதோ அதிக அளவு உணவு சாப்பிடும் போதோ எளிதில் செரிமானமாக செயற்கை குளிர்பானங்களை நாடுவதன் மூலம் வயிறு உப்புசத்தை அதிகரித்துகொள்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.