அந்த மூணு நாள் செய்ய வேண்டிய ஆரோக்கியமான ஆறு விஷயங்கள்!

காலங்காலமாக தொடர்ந்து இது குறித்த விழிப்புணர்வு வந்துகொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தங்கள் ஆயுள்காலத்தில் (பொதுவான) 6 முதல் 8 வருடங்கள் வரையில் இந்த மாதவிடாய் நாளை எதிர்கொள்கிறார்கள். இது இயற்கையான நிகழ்வு. ஆனால் இந்த காலத்தில் கண்டிப்பாக சுகாதாரம் பேண வேண்டும். ஆனால் உலகளவில் குறிப்பாக இந்தியாவில் வசிக்கும் பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதாக மருத்துவத்துறை தெரிவிக்கிறது. உறுப்பு சுத்தம், உடல் சுத்தம் முதல் உடல் ஆரோக்கியம் வரை மற்ற நாள்களை காட்டிலும் இந்த நாட்களில் கூடுதலாக கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இது குறித்து தெரிந்துகொள்வொம்..

தரமான பொருள்

samayam tamil

40 வருடங்களுக்கு முன்பு வரை நம் நாட்டு பெண்கள் காட்டன் துணிகளை தான் உதிரபோக்கு உறிஞ்சுவதற்கு பயன்படுத்தினார்கள். கடந்த30 வருடங்களுக்கு முன்பு தான் நாப்கின் பயன்பாடு இங்கு வந்தது.

 

இன்று குக்கிராமப்புறங்களிலும் கூட நாப்கின் பயன்பாடுதான். நாப்கினுக்கு மாற்றாக மென்சுரல் கப், டேம்பர், பேண்டி லைனர், ஓவர் நைட் பேண்டீஸ் போன்ற பொருள்கள் வந்துவிட்டது. எனினும் பலரும் பயன்படுத்துவது நாப்கின் தான்.

முதலில் நீங்கள் மாதவிடாய் உதிரபோக்கை உறிஞ்ச பயன்படுத்தும் பொருள் எதுவாக இருந்தாலும் தரமானதை மட்டும் பயன்படுத்துங்கள்.கிருமிகள் தொற்றும் இக்காலத்தில் பயன்படுத்தும் பொருள்கள் தரமானதாக இருக்கவேண்டும்.

​அவ்வபோது மாற்றுங்கள்

samayam tamil

உதிரப்போக்கு ஏற்படும் போதெல்லாம் நாப்கின் மாற்றம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் அதை அகற்றுவது மிகவும் அவசியம். நீண்ட நேரம் நாப்கினில் உதிரம் தங்கும் போது கிருமிகள் மீண்டும் உறுப்புக்கு செல்லவும் நோய்த்தொற்று உருவாகவும் வாய்ப்புண்டு.மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக நாப்கின் மாற்றுங்கள். (உதிரபோக்கு குறைந்தாலும் கூட)

பெண் பிள்ளைகள், கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்குசெல்லும் பெண்கள் அனைவரும் செய்யும் தவறு வெளியிடங்களில் நாப்கினை மாற்றமுடியாததால் நீண்ட நேரம் ஒன்றை மட்டும் உபயோகிப்பது தான். இது கண்டிப்பாக் ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்கும்.

​சுகாதாரமும் அவசியம்

samayam tamil

நாப்கினை மாற்றும் போது அதை பேப்பரில் மடித்து குப்பைகூடையில் அகற்றுங்கள். இதனால் வெளி இடங்களிலும் கிருமிகள் தொற்றாது. வாடையும் வெளியேறாது. இதை அப்புறப்படுத்த தயங்குவதால் கூட நிறைய பெண் பிள்ளைகள் வெளியிடங்களில் நாப்கின் மாற்றுவதை விரும்புவதில்லை.

 

அதனால் கையில் எப்போதும் பேப்பரையும் வைத்திருங்கள்.ஒவ்வொரு முறை நாப்கின் மாற்றத்துக்கு பிறகும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுங்கள் .

​உறுப்பு சுத்தம்

samayam tamil

எப்போதும் உடல் சுத்தம் பேணுவது நல்லது. மாதவிடாய் காலங்களில் மேலும் உடலை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் நல்லது. உதிரபோக்கு உண்டாகும் நாளில் பொதுவாக ஒருவித வாடை உண்டாகக்கூடும். அதனால் தினமும் இரண்டு வேளை உடலுக்கு குளிப்பது உடல் சோர்வை உண்டாக்காது.

மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்பு சுகாதாரம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயம். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக பிறப்புறுப்பை சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.பூப்படையும் காலம் முதலே பெண் பிள்ளைகளுக்கு இந்த பிறப்புறுப்பு சுத்தத்தை கற்றுத்தருவது அவசியம். இல்லையெனில் உறுப்பில் எரிச்சலும் அரிப்பும் உண்டாகக்கூடும்.

​வலி நிவாரணி

samayam tamil

மாதவிடாய் கால வலி என்பது பொதுவானது ஆனால் இன்று இளம்பெண்கள் உடல் சோர்வோடு உடல் ஆரோக்கிய குறைபாட்டிலும் சோர்வை கொண்டிருப்பதால் வயிறு வலி இன்னும் இன்னும் தீவிரமாகிறது.. தீவிரமான முதுகுவலி படுக்கையை விட்டு எழமுடியாத வலி என்றால் மருத்துவரை அணுகி மாத்திரைகள் எடுத்துகொள்வது தவறில்லை. ஆனால் இலேசான வலியை கூட பொறுத்துகொள்ள முடியாமல் மாத்திரைகள் எடுப்பது நிச்சயம் பின்விளைவுகளை உண்டாக்கவே செய்யும்.

​உணவில் கவனம்

samayam tamil

உதிரபோக்கு உண்டாகும் இக்காலத்தில் வெளியேறும் இரத்தம் எல்லாமே உடல் இழக்கும் சத்து தான். அதனால் இதை ஈடு செய்ய உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டிய உணவு பொருள்களை எடுத்துகொள்ள வேண்டும் உடல் சோர்வை காட்டி உணவை மறுத்தால் உடல் மேலும் பலவீனமாகும். அடுத்தடுத்த மாதவிடாய் காலங்களில் கூடுதலான சோர்வை உணர்வீர்கள்.

இவையெல்லாம் மீறி அசாதாரணமான வலியையோ அதிக உதிரபோக்கையோ அளவுக்கு மீறீய பலவீனத்தையோ ஒவ்வொரு மாதமும் உணர்ந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.