ஆரஞ்சு பழத்தை விட வைட்டமின் சி அதிகமுள்ள 14 உணவுகள் என்னென்ன தெரியுமா? இனி அதையும் சாப்பிடுங்க…

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கென்று சில அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அவசியம். அதில் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து தான் இந்த விட்டமின் சி. ஏனெனில் இந்த விட்டமின் சி ஊட்டச்சத்து நம் உடலில் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்கள் மாதிரி செயல்படுகிறது. இது நமது உடலுக்கு தேவையான நோயெதிப்பு சக்தியை வழங்குகிறது. இதய நோய்கள், சரும நோய்கள், மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், கண் நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

​வைட்டமின் சி உணவுகள்

samayam tamil

இந்த விட்டமின் சி பற்றாக்குறை ஏற்பட்டால் நமது எலும்புகளும் தசைகளும் பலவீனம் அடைந்து விடும். எனவே போதுமான அளவு விட்டமின் சி சத்தை பெற நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. பொதுவாக விட்டமின் சி அடங்கிய உணவு என்றால் நாம் ஆரஞ்சு பழங்களையே கை காட்டுவோம். ஆனால் ஆரஞ்சு பழங்களில் வெறும் 69.7 மி. கி அளவு மட்டுமே விட்டமின் சி உள்ளது. ஆனால் உண்மையில் இதை விட நிறைய உணவுகளில் விட்டமின் சி அதிகளவு அடங்கியுள்ளன . ஆரஞ்சு பழங்களை சாப்பிட பிடிக்காதவர்கள் இந்த 12 வகையான உணவுகளில் இருந்தும் கூட நீங்கள் விட்டமின் சி சத்தை பெறலாம். இந்த 12 வகையான உணவுகளில் ஆரஞ்சு பழத்தை விட அதிகளவு விட்டமின் சி உள்ளது. அவை எவை என இப்பொழுது பார்க்கலாம்.

​மிளகாய்

samayam tamil

1/2 கப் நறுக்கப்பட்ட அல்லது துண்டுகளாக்கப்பட்ட மிளகாயில் 107.8 மி.கி அளவு விட்டமின் சி அடங்கியுள்ளது. பஃவ்வல்லலோ பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் காரசாரமான உணவான மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டு வரும் போது மூட்டு மற்றும் தசை வலியை போக்க முடிகிறது.

சிவப்பு மிளகாய் தூள்

ஒரு கப் நறுக்கப்பட்ட சிவப்பு மிளகாய் தூளில் ஒரு ஆரஞ்சில் இருக்கும் 190 மி. கி அளவை விட 3 மடங்கு அதிகமாக விட்டமின் சி காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிவப்பு மிளகாயில் விட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

பச்சை மிளகாய்

ஒரு கப் நறுக்கிய பச்சை மிளகாயில் ஆரஞ்சு பழத்தை விட குறைவாக 120 மி. கி வரை விட்டமின் சி காணப்படுகிறது. இருப்பினும் இது ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் சி அளவில் 200 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. மேலும் பச்சை மிளகாயில் நார்ச்சத்துகள் அதிகமாக இருப்பதால் நம் சீரண சக்திக்கும் துணை புரிகின்றன.

​கீரைகள்

samayam tamil

கீரையில் விட்டமின் ஏ, கே சத்தைப் போல 80.4 மி. கி அளவு விட்டமின் சியும் காணப்படுகிறது. மேலும் கீரைகள் ஊட்டச்சத்துக்களின் இருப்பிடம் என்றே கூறலாம். இவை நமக்கு இன்னும் ஏராளமான தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் வழங்குகின்றன.

பிராக்கோலி

பிரக்கோலியில் 132 மி. கி அளவு விட்டமின் சியும், 30 கலோரிகள் நார்ச்சத்துகளும் காணப்படுகின்றன. மேலும் பிரக்கோலியில் புற்றுநோயை தடுக்கும் பண்புகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரஞ்சு பழத்தை விரும்பாதவர் பிரக்கோலியில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

samayam tamil

காலிஃப்ளவர்

 

samayam tamil

ஒரு காலிஃப்ளவர் பூங்கொத்தில் 127.7 மி. கி அளவு விட்டமின் சி அடங்கியுள்ளது. எனவே இதை உங்க உணவில் வறுத்தோ, அவித்தோ, பொரியல் செய்தோ சாப்பிட்டு வரலாம். 5 கிராம் நார்ச்சத்துகள் மற்றும் 5 கி அளவிற்கு புரோட்டீனும் காணப்படுவது இதன் சிறப்பு .

முட்டைக்கோசு

முட்டைக்கோசுவில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் காணப்படுகிறது. இதில் பைப்டோ நியூட்ரின்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்றவையும் காணப்படுகின்றன. இதில் 74.8 மி. கி அளவிற்கு விட்டமின் சி காணப்படுகிறது. இதை நீங்கள் அவித்தோ அல்லது பொரியல் செய்தோ உங்க உணவில் சேர்த்து வரலாம். உங்க உடம்பிற்கு தேவையான விட்டமின் சி சத்தும் இதன் மூலம் கிடைக்கப் பெறும்.

அன்னாசி பழம்

samayam tamil

அன்னாசி பழத்தில் 78.9 மி. கி விட்டமின் சியுடன், புரோமலைன் என்ற சீரண என்சைம்மும் காணப்படுகிறது. இது உணவை உடைத்து வயிறு மந்தத்தை குறைக்கிறது. புரோமலைனில் இயற்கையான ஆழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அழற்சி சம்பந்தமான நோய்களை விரட்டுகிறது.

கிவி பழம்

ஒரு நாளைக்கு 2 கிவி பழத்தை எடுத்துக் கொண்டால் 137.2 மி. கி அளவு விட்டமின் சி சத்தை பெறலாம். இந்த பழத்தில் பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்களும் அதிகளவில் காணப்படுகிறது.

​மாம்பழம்

samayam tamil

இதுவரை மாம்பழம் விட்டமின் ஏ சத்து நிறைந்தது என்று தான் நமக்கு தெரியும். ஆனால் உண்மையில் மாம்பழத்தில் 122.3 மி. கி அளவிற்கு விட்டமின் சி சத்து காணப்படுகிறது. எனவே தான் மாம்பழம் நம் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் ஆரோக்கியத்திற்கும் துணை புரிகிறது.

மஞ்சள் குடைமிளகாய்

மஞ்சள் குடைமிளகாயில் கிட்டத்தட்ட 341 மி. கி அளவு விட்டமின் சி காணப்படுகிறது. இது ஆரஞ்சை விட அதிகமாகும். எனவே மக்கள் விட்டமின் சி பற்றாக்குறையை போக்க மஞ்சள் குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

​கொய்யாப்பழம்

samayam tamil

கொய்யாப்பழம் எளிதாக கிடைக்கக் கூடிய பழம். விலை குறைவான பழம் என்பதால் அனைவரும் வாங்கி சாப்பிட முடியும். இந்த தம்மா துண்டு கொய்யாப்பழத்தில் 228.3 மி. கி அளவிற்கு விட்டமின் சி அடங்கியுள்ளது. எனவே குழந்தைகளுக்கு விட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் கொய்யாப்பழம் கொடுங்கள். நாம் மிக சாதாரணமாக நினைத்து ஒதுக்கும் கொய்யாப் பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி இருக்கிறது. அதோடு மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்க வல்லது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும், சர்க்கரை வியாதி உள்ளவர்களும் கூட இந்த கொய்யாப் பழத்தைச சாப்பிடலாம்.

​விட்டமின் சியின் பயன்கள்

samayam tamil

உடலில் உள்ள எலும்புகள், தசைகள், பற்கள் உருவாக உதவுகிறது.புரதத்துடன் இணைந்து நம் உடலின் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

உடலின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமி தொற்றுகள் நம்மை அண்ட விடாமல் காக்கிறது.

உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சவும், கால்சியம் எலும்புகளுக்கு சென்றடையவும் விட்டமின் சி அவசியம் தேவை.

காய்ச்சல், சலதோஷம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.