பல்கலை புதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று

பாறுக் ஷிஹான்
தென்கிழக்குப் பலக்லைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைகள், அரபு மொழிப் பீடத்துக்கு 2018/2019 கல்வியாண்டுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள், www.seu.ac.lk எனும் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தினூடாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தா  அறிவித்துள்ளார்.
இம்மாதம் 06ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு பதிவு செய்துகொள்ளுமாறும்  பதிவு செய்யாதவறியவர்கள் பின்னர் அனுமதிக்கப்படமாட்டார்களெனவும், அவர் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இணையத்தள ஒருங்கிணைப்பாளரை 0761313778 எனும் அலைபேசி இலக்கத்துடனும் சிரேஷ்ட உதவிப் பதிவாளரை 0718035346 எனும் அலைபேசி இலக்கத்துடனும் தொடர்புகொண்டு  மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்