ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் கடற்படை தளபதிக்கும் இடையில் சந்திப்பு
ஓய்வுபெறவுள்ள கடற்படையின் 23ஆவது தளபதி அட்மிரல் பியால் டி சில்வாவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.
மேலும் அட்மிரல் பியால் டி சில்வா, அட்மிரலாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தரம் உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு நினைவு பரிசு ஒன்றினை நேற்று வழங்கியிருந்தார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை