பளை ஆயுள்வேத வைத்தியசாலைக்கு 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு…

பளை ஆயுள்வேத வைத்தியசாலை அமைப்பதற்கு பத்து மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும் பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பச்சிலைபள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட காலமாக ஒரு தற்காலிக கட்டடத்தில் இயங்கி வரும் பளை ஆயுள்வேத வைத்தியசாலையில் மிகவும் அதிகமான நோயாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந் நிலையில் குறித்த வைத்திய சாலையில் நோயாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் போதிய வசதியின்மை அவதானிக்க கூடியதாக இருந்தது.
குறித்த நிலைமைகளை கருத்தில் கொண்டு நோயாளர்களுக்கு நல்ல சேவையை வழங்கும் பொருட்டு பச்சிலைபள்ளியில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மூலம் வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சுக்கு செல்கின்ற சமூக சேவை நிதியின் மூலம் குறித்த பணியை மேற்கொண்டு தருமாறு தவிசாளர் விடுத்த வேண்டுகோளினை ஏற்று குறித்த நிதி வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.