தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிக்க ட்ரோன் கமெராக்கள்!

தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பதற்காக இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

தனிமைப்படுத்தலில் இருந்து, குறித்த பகுதிகள் விடுவிக்கப்படும் வரை ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி கண்காணிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ட்ரோன் கமராக்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு விசேட பொலிஸ் குழுவை ஈடுபடுத்தி, சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.