காவியா பெண்கள் அமைப்பினால் பெண்களுக்கு  எதிரான வன்முறை ஒழிப்புவார செயல்வாதம் …

(எஸ். சதீஸ்)
பெண்களுக்கு  எதிரான வன்முறை ஒழிப்பு வார செயல்வாதமானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் காவியா பெண்கள் நிறுவனத்தினுடாக பல செயற்பாடுகளுடன் தொடக்க நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் ‘பெண்கள்,  சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்.’ எனும் வாசகம் பொறிக்கப்பட்ட வெள்ளப்பட்டி அணிவித்து தொடங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திலும்,  பேரில்லாவெளி கிராமத்திலும், ‘மகிழ்ச்சியான குடும்பம் என்னிலிருந்து ஆரம்பமாகின்றது’ எனும் கருப்பொருளிற்கமைய வன்முறை அற்ற வாழ்வுக்கான பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் கோறளைப்பற்று கிரான்  பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, காவியா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார், காவியா பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்,  உளவள ஆலோசகர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,  கிராம உத்தோயோகத்தர், காணி பிரிவு அதிகாரிகள்,  காவியா நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
இதில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்படட கிராமமான பேரில்லாவெளி மக்களுக்கு விழிப்புணர்வு நாடகம் மற்றும் காணிபத்திரம் வழங்குவதற்கான ஆவணம் தயாரிக்கும் செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.